For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய ஐடி ஊழியர்களுக்கு விசா எண்ணிக்கையை குறைத்தது சிங்கப்பூர்! அமெரிக்காவை தொடர்ந்து ஷாக்

சமீப காலமாகவே இந்திய ஊழியர்களுக்கான விசா அளவை சிங்கப்பூர் குறைத்துக்கொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது. 2016ம் ஆண்டு முதலே இவ்வாறு நிலைமை மாறிவிட்டதாம்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: இந்திய ஐடி துறை ஊழியர்களுக்கான விசா அளவை சிங்கப்பூர் குறைத்துக்கொண்டுள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து சிங்கப்பூரும் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது ஐடி ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் இந்தியாவை சேர்ந்த ஹெச்.சி.எல், டாடா, விப்ரோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டுள்ளன. அங்கு, கணிசமாக இந்திய ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது இவர்கள் வழக்கம்.

இதுபோல பணிக்கு அமர்த்துவதை குறைத்துக்கொண்டு, சிங்கப்பூரை சேர்ந்த உள்நாட்டு பணியாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று அந்த நாட்டு அரசு, ஹெச்.சி.எல், டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ, காங்னிசென்ட்மற்றும் எல்அன்டுடி இன்போடெக் ஆகிய நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

விசா எண்ணிக்கை

விசா எண்ணிக்கை

இது வழக்கமான நடைமுறைதான் என்றபதோிலும் சமீப காலமாகவே இந்திய ஊழியர்களுக்கான விசா அளவை சிங்கப்பூர் குறைத்துக்கொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது. 2016ம் ஆண்டு முதலே இவ்வாறு நிலைமை மாறிவிட்டதாம்.

அமெரிக்காவில் கட்டுப்பாடு

அமெரிக்காவில் கட்டுப்பாடு

ஏற்கனவே அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு, இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள் விசா பெருவதில் பெரும் கட்டுப்பாட்டுகள் வந்துவிட்டன. மாஸ்டர் டிகிரி படித்திருக்க வேண்டும், அதிகப்படியான சம்பளம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை ட்ரம்ப் அரசு புகுத்தியுள்ளது.

சிங்கப்பூரிலும்

சிங்கப்பூரிலும்

இந்த நிலையில் சிங்கப்பூரும், இன்திய ஊழியர்களுக்கான விசா எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளது ஐடி துறையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுஷ்மா உறுதி

சுஷ்மா உறுதி

அமெரிக்க ஹெச்1 விசா சட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கும்படியாக, அந்த நாட்டு நிர்வாகத்துடன் பேச்சுவாரத்தை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ராஜ்யசபாவில் கூறியுள்ள நிலையில் சிங்கப்பூர் விவகாரம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
While Indian workers and companies in the information technology sector are recovering from Donald Trump's new visa norms for the USA, Singapore is quietly cutting down visas for Indians. The slashing has reportedly been in force since early 2016 and visas for IT workers has dropped drastically since then.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X