For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் ஒரு க்ளிண்டன் – புஷ் போட்டியா?: அமெரிக்க அரசியலில் பரபரப்பு

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் தேர்தலில் 1992 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஹெச். டபுள்யூ புஷ் க்கும் பில் க்ளிண்டனுக்கும் இடையேயான போட்டியில், பில் க்ளிண்டன் வெற்றி பெற்று அதிபர் ஆனார்.

தற்போதைய சூழலில் மீண்டும் ஒரு 'க்ளிண்டன் - புஷ்' போட்டி வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அமெரிக்காவிலும் குடும்ப அரசியல்

அமெரிக்காவிலும் குடும்ப அரசியல்

ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்த போது துணை அதிபராக இருந்த ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ புஷ், 1988 தேர்தலில் அதிபராக வெற்றி பெற்றார். அடுத்த தேர்தலில் பில் க்ளிண்டனிடம் தோல்வியுற்றார். அவருடைய தந்தை ப்ரஸ்காட் புஷ் அமெரிக்க செனட்டராக இருந்தார். மூத்த மகன் ஜார்ஜ் டபுள்யூ புஷ் 2000 மற்றும் 2004 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று அதிபர் ஆனார். இரண்டாவது மகன் ஜெப் புஷ், ஃப்ளோரிடா கவர்னராக இருந்தவர். தற்போது 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். புஷ் குடும்பத்தில் அனைவரும் குடியரசுக் கட்சியை சார்ந்தவர்கள்.

ஜனநாயகக் கட்சியின் பில் க்ளிண்டன் வாரிசாக ஹிலரி க்ளிண்டன் ஏற்கனவே போட்டியிடுவதாக அறிவித்து களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

ஹிலரியும் ஜெப் பும் மோதினால் ?

ஹிலரியும் ஜெப் பும் மோதினால் ?

தேர்தலில் எதிரணியில் போட்டியிட்டு தோற்கடித்தாலும், சீனியர் புஷ் தனது தந்தைக்கு சமமானவர் என்று பில் க்ளிண்டன் சொந்தம் கொண்டாடுகிறார். இரு குடும்பத்தினருக்கும் நல்ல நட்பு உண்டு. சுக துக்கங்களில் பங்கேற்றுக் கொள்வார்கள். ஹிலரி க்ளிண்டன் எங்கள் வீட்டு மருமகள் என்று ஜெப் புஷ் முன்னர் ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில் இருவரும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகுமா? அப்படி ஏற்பட்டால் போட்டி எப்படி இருக்கும் , யார் வெற்றி பெறுவார்கள் என்று இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

அப்பா யாரோ? அண்ணன் யாரோ?

அப்பா யாரோ? அண்ணன் யாரோ?

'ஹிலரியுடன் மோதுவதெல்லாம் க்ளைமாக்ஸ் ஃபைட்டுப்பா. உட்கட்சி சண்டையில் முதலில் வெற்றி பெறுவாரா' என்ற குரலும் கேட்காமலில்லை. ஏன்னா அவருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ‘புஷ்' என்ற பெயரே அவருக்கு வில்லனாகி விடும் போலிருக்கு. அப்பாவும் அண்ணனும் வாங்கி வைத்திருக்கும் ‘நல்ல' பேருக்கெல்லாம் இவர் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கு. 'எங்கப்பா வேற, எங்கண்ணன் வேற, நான் வேற' என்று கூட்டங்களில் பேசுகிறார் புது புஷ். 'உங்க வீட்டிலேயே அண்ணன் தம்பி எல்லாம் ஒரே மாதிரியா இருக்காங்க? நாங்களும் அப்படித்தான். என்னுடைய கொள்கை, செயல்திட்டம் எல்லாமே வேற மாதிரின்னு சொல்றாரு'.

'விட்டால் எனக்கும் அவங்களுக்கும் சம்மந்தமே இல்லேன்னுடுவாரு போலிருக்கு!' என கமெண்ட்கள் கிளம்பிவிட்டன.

உட்கட்சி தேர்தலில் தேறுவாரா ஜெப் புஷ்?

உட்கட்சி தேர்தலில் தேறுவாரா ஜெப் புஷ்?

நான் அவனில்லை ரேஞ்சுக்கு சொன்னாலும், இன்னும் போட்டியிடுவதைப் பற்றி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை. முன்னாடியே போட்டியில் குதித்து விட்ட ரான் பால், டெட் க்ரூஸ், இந்த வாரம் குதித்த மார்க்கோ ரூபியோ என மூவர் அணி சுறுசுறுப்பா வேலையில் இறங்கிட்டாங்க. இதோ வரப்போறேன்னு நியூஜெர்ஸி க்ரிஸ் க்ரிஸ்டியும் வந்துகிட்டே இருக்காரு.

ஒவ்வொருத்தரும் ஒருவிதம் ன்னு கட்சியில் வெவ்வேறு மட்ட ஆதரவைப் பெற்றவர்கள். மார்க்கோ ரூபியோ, ஜெப் -ன் ப்ளோரிடாவிலிருந்து வந்துள்ள க்யூபன் அமெரிக்கன். இலத்தீன் இன மக்களின் ஆதரவைப் பெற்றவர்.

லத்தீன் மக்கள் ஆதரவு

லத்தீன் மக்கள் ஆதரவு

ஜெப் புஷ் ஷின் மனைவி மெக்சிகோவைச் சார்ந்தவர். ஜெப் பும் ஸ்பானிஷ் மொழியில் வெளுத்துக் கட்டுபவர். தங்கள் மருமகன் என்று லத்தீன் இன மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர். குடியரசுக் கட்சிக்கு லத்தீன் இன மக்களின் வாக்கு மிகவும் முக்கியமானது. இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும் சுறுசுறுப்பாக தேர்தல் பணியில் இறங்கி விட்டார். ஏராளமான நன்கொடையாளர்களுடன், மற்றவர்களை விட பண பலத்தில் முன்னணியில் இருக்கிறார். தற்போதைய நிலையில் ஜெப் புஷ் குடியரசுக் கட்சியின் வலுவான வேட்பாளராகத்தான் தெரிகிறார்.

இன்னொரு பக்கம் ஜனநாயகக் கட்சியில் ஹிலரி க்ளிண்டனுக்கு போட்டியாக இதுவரை யாரும் களத்தில் இல்லை. உட்கட்சி தேர்தலை ஊதித் தள்ளிவிடுவார் போலத் தெரிகிறது.

English summary
It seems like a 'Clinton - Bush clash' may happen in US presidential elections once again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X