For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜி 20 மாநாடு.. எல்லோரும் ஊரை விட்டு ஓடுங்க.. மக்களை விரட்டும் அர்ஜென்டினா!

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று துவங்குகிறது ஜி20 உச்சி மாநாடு.. பிரதமர் மோடி பங்கேற்பு

    பியூனோஸ் அயர்ஸ்: ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, தலைநகரில் இருந்து மக்களை வெளியேற அர்ஜென்டினா அரசு அறிவுறுத்தி இருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் 13 வது ஜி20 உச்சி மாநாடு அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் இன்று துவங்குகிறது. டிசம்பர் 1 ம் தேதி வரை நடக்க உள்ளது.

    ahead of g20 summit, argentina govt advises people to leave buenos Aires

    சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையேற்றம், பொருளாதார சீர்திருத்தம், தீவிரவாதிகள் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நேற்றிரவு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உலக தலைவர்களையும் சந்திக்க, பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    இந்தநிலையில், உலக தலைவர்களின் வருகையை ஒட்டி, விமானநிலையம், ரயில் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அச்சுறுத்தலை தவிர்க்கும் விதமாக தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து மக்களை வெளியேறும் படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    G20 summit, argentina govt asks people to leave, டிver 20,000 police personnel have been assigned the task of carrying out the security operation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X