For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா எதிர்பார்த்து காத்திருந்த முஸ்லீம் ஹீரோ அகமது முகமது

By Siva
Google Oneindia Tamil News

இர்விங்: அமெரிக்காவில் கடிகாரம் செய்ததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்ட 14 வயது மாணவர் அகமது முகமது அமெரிக்காவின் ஹீரோவாக ஆகியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள இர்விங் நகரைச் சேர்ந்தவர் அகமது முகமது(14). அதே பகுதியில் உள்ள மெக்ஆர்தர் உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தான் செய்த கடிகாரத்தை பள்ளிக்கு எடுத்துச் சென்றார்.

ஆங்கில வகுப்பு நடந்து கொண்டிருக்கையில் கடிகாரத்தில் இருந்து அலாரம் சப்தம் வர ஆசிரியை அது என்ன என்று கேட்டுள்ளார். உடனே அகமது தான் செய்த கடிகாரத்தை எடுத்து ஆசிரியையிடம் பெருமையாக காண்பித்துள்ளார்.

கைது

கடிகாரத்தை பார்த்த ஆசிரியை அது வீட்டில் செய்த வெடிகுண்டு என்று நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஒரு சிறுவனை கைது செய்ய ஒன்று அல்ல 5 போலீசார் பள்ளிக்கு வந்தனர். அப்பாவி மாணவனின் கையில் விலங்கு மாட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

சிறுவன் கைதான செய்தி அறிந்த அமெரிக்கா மற்றும் உலக மக்கள் அகமதுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். மேலும் மாணவனை கைது செய்த போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால் #IStandWithAhmed என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.

ஹீரோ

ஹீரோ

கடிகாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட அகமதுவுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் ஆதரவாக ட்வீட் செய்தனர். அகமது ஒரே நாளில் அமெரிக்காவின் ஹீரோவாக ஆகிவிட்டார்.

பாராட்டு

பாராட்டு

நீ கடிகாரம் என்ன, எது வேண்டுமானாலும் செய், நாங்கள் இருக்கிறோம் என்று அமெரிக்க மக்கள் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கைது ஏன்?

கைது ஏன்?

இர்விங் நகர மேயர் பெத் வான் டைன் முஸ்லீம்கள் அமெரிக்கா கலாச்சாரம் மற்றும் நீதிமன்றங்களை கைப்பற்ற சதித்திட்டம் தீட்டுவதாக நம்புபவர். முஸ்லீம்கள் அந்த நகரில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவதை தடுக்க அவர் சட்டம் கொண்டு வந்தார். அப்படிபட்ட நகரில் முஸ்லீம் மாணவர் கடிகாரம் செய்தாலும் அதை வெடிகுண்டாகத் தான் பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.

English summary
14-year old student Ahamed Muhamed, who got arrested for making a clock, has become the muslim hero USA has been waiting for.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X