For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏஐ ரோபோ, டிவின்ஸ் எலி, ஐஸ் கிரீம்.. ஆகாயத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பியது என்ன?

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏஐ ரோபோட் ஒன்றையும், இரண்டு எலிகளையும், கொஞ்சம் உணவுப் பொருட்களையும் அனுப்பி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏஐ ரோபோட் ஒன்றையும், இரண்டு எலிகளையும், கொஞ்சம் உணவுப் பொருட்களையும் அனுப்பி உள்ளது.

விண்வெளியில் சில பெரிய நாடுகள் மட்டும் ஆராய்ச்சி மையம் வைத்து உள்ளது. அதே சமயம் விண்வெளியில் பெரிய நாடுகள் எல்லாம் பொதுவாக பயன்படுத்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இருக்கிறது. இங்கு பல நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள்.

இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை விண்வெளி வீரர்களுக்கு தேவையான பொருட்களை அனுப்புவார்கள். இந்த பொருட்களை அனுப்ப இந்த முறை பிரபல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உதவி உள்ளது.

ரோபோட் சிமோன்

ரோபோட் சிமோன்

பூமியிலேயே ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ரோபோக்களை உருவாக்கலாமா, வேண்டாமா என்ற கேள்வி இருந்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயன்படுத்த தற்போது ஏஐ ரோபோட் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதன் பெயர், சிமோன் ஆகும். ஜெர்மன் விஞ்ஞானிகள் இதை உருவாக்கி உள்ளனர்.

ஏன் அனுப்பினார்கள்

ஏன் அனுப்பினார்கள்

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஜெர்மன் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் கிரெஸ்ட்டுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று இந்த ரோபோ அனுப்பப்பட்டுள்ளது. பெரிய வெள்ளை நிற இந்த ரோபோட்டிற்கு ஒரு ஸ்மைலி முகம் கூட இருக்கிறது. இது கிரெஸ்ட்டுக்கு உதவுவது மட்டுமில்லாமல், தானாகவும் சில ஆராய்ச்சிகளை விண்வெளியில் செய்யும் என்று கூறப்படுகிறது.

மீண்டும் அழைத்து வரப்படும்

மீண்டும் அழைத்து வரப்படும்

ஸ்பேஸுக்கு முறையாக கொண்டு செல்லப்பட்ட முதல், ஏஐ ரோபோட் இதுதான். இது இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை மட்டுமே அங்கு இருக்கும். அதன்பின் பூமிக்கு மீண்டும் கொண்டு வரப்படும். பின் பூமியில் அதை வைத்து சில சோதனைகள் செய்வார்கள். எல்லாம் சரியாக இருந்தால், அங்கேயே இருக்கும் வகையில் ரோபோட் ஒன்றை அனுப்ப இருக்கிறார்கள்.

இன்னும்

இன்னும்

அதேபோல் சில உயிரியல் சோதனைக்காக, டிவின்ஸ் எலிகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை வைத்து டிசம்பர் மாதம் வரை சோதனை செய்வார்கள். இது போக அங்கு உள்ளவர்கள் காஃபி குடிக்க நிறைய காபி மேக்கரும், ஐஸ் கிரீம் போன்ற உணவுப்பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக நேற்று விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது.

English summary
SpaceX delivers German made Cimon AI robot and ice cream and identical twin mice, to International Space Station for its Astronauts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X