For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓவைசிக்கு சவூதி அரேபியாவில் பாராட்டு விழா!

Google Oneindia Tamil News

AIMIM leader Akbaruddin Owaisi feted in Saudi Arabia
ரியாத்: அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹதுல் முஸ்லிமீ்ன் கட்சித் தலைவர் அக்பருதீன் ஓவைசிக்கு சவூதி அரேபியாவில், இந்திய அமைப்பு ஒன்று பாராட்டு விழா நடத்தியது.

ஜெட்டாவைச் சேர்ந்த பஸ்ம் இ இத்திஹத் என்ற இந்திய நல அமைப்பு இந்த விழாவை நடத்தியது. இந்திய முஸ்லீம்களுக்கு ஆற்றிய சேவைக்காக ஓவைசி பாராட்டிக் கெளரவிக்கப்பட்டார்.

ஜெட்டாவில் நடந்த இந்த விழாவில் அமைப்பின் தலைவர் அகமது உத்தின் ஓவைசி தலைமை தாங்கினார். இந்திய முஸ்லீ்ம்களுக்கு குறிப்பாக ஹைதராபாத் வாழ் முஸ்லீம்களுக்காக அவர் ஆற்றிய சேவைக்காக ஓவைசி பாராட்டப்பட்டார்.

பல்வேறு இந்தியப் பிரதிநிதிகள், சவூதி அரேபியா வாழ் என்.ஆர்.ஐ இந்தியர்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.

பஸ்ம் இ இத்திஹத் துணைத் தலைவர் முகம்மது உபைத் உர் ரஹ்மான் ஓவைசியைப் பாராட்டிப் பேசினார். மேலும் தெலுங்கானா சட்டசபைக்கு ஓவைசி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஓவைசி, இந்திய முஸ்லீம்கள் நீதி பெறுவதற்கு ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்து விட்டது. முஸ்லீம்களின் எண்ணிக்கை 25 கோடி ஆகும். ஆனால் நாம் ஒற்றுமையாக இல்லை. நாம் ஒற்றுமையுடன் இருந்தால், பொருளாதார, சமூக ரீதியாக சந்தித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கல்விதான் இந்திய முஸ்லீம்கள் சந்தித்து வரும் மிகப் பெரிய சவால் என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Controversial legislator Akbaruddin Owaisi was honoured by a Jeddah-based Indian community organisation for his contribution to the country's Muslims, media reported. Bazm-e-Ittihad, an Indian welfare organisation in Saudi Arabia's coastal city of Jeddah, at a function presided over by its president Ahmad Uddin Owaisi feted the Hyderabad-based All India Majlis-e-Ittihadul Muslimeen (AIMIM) leader Akbaruddin Owaisi for his service to Indian Muslims, particularly to the Hyderabadi community, the Saudi Gazette reported Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X