For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முக்காடு போட்டுட்டு போங்க.. ஏர் பிரான்ஸ் ஏர் ஹோஸ்டஸ்களுக்கு புது உத்தரவு

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈரான் செல்லும் விமானங்களில் பணி புரியும் விமானப் பணிப்பெண்கள் தங்களது தலையை மறைத்து முக்காடிட்டுச் செல்ல வேண்டும் என ஏர் பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சமீபத்தில் ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் தனது பெண் ஊழியைகளுக்கு தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பியது. அதில், ஏர் பிரான்ஸ் விமானப் பணிப்பெண்கள் ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு செல்லும் போது, இறுக்கமான மேலாடைகள் அணியக் கூடாது என்றும், தலையை துணியால் முக்காடிட்டு மறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Air France staff furious over new Islamic headscarf dress code

இந்த புதிய உத்தரவானது இம்மாதம் 17ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தான் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு ஏர் பிரான்ஸின் விமானச் சேவை மீண்டும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதற்கு பெண் ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஊழியர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நிர்வாகம் தலையிடுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மற்ற மதங்களைச் சார்ந்தவர்களையும், இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதத்தின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றச் சொல்வது சரியல்ல என்பது அவர்களது வாதம்.

இது தொடர்பாக விமான ஊழியர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

English summary
AIR France staff are threatening mutiny after the airline told its female cabin crew they had to put on headscarves before flying into Iran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X