For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயமான விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பத்தாருக்கு இழப்பீடு: ஏர் ஏசியா

Google Oneindia Tamil News

ஜகார்த்தா: விபத்தில் சிக்கி இருக்கலாம் என கருதப்படும் மாயமான ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று காலை இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற ஏர் ஏசியா பயணிகள் விமானம் 162 பயணிகளுடன் திடீரென மாயமானது. அந்த விமானம் விபத்தில் சிக்கி இருக்கலாம் என இந்தோனேசிய அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக மாயமான விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது.

AirAsia boss flags compensation for missing passengers

இந்நிலையில், மாயமான ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேலும் இது தொடர்பாக கூறுகையில், ‘கடந்த 13 ஆண்டுகளில் விமான பணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில், தங்களது நிறுவனத்தில் 13 ஆண்டுகளில் 22 கோடி மக்கள் பாதுகாப்பாக விமான பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், தற்போதும் ஏர் ஏசியா விமான சேவை மக்கள் பயன்படுத்தி வருவதாகவும், வரும் காலத்தில் விமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.

English summary
The head of AirAsia says his airline is prepared to offer compensation for the missing passengers of Flight QZ-8501
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X