For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயணிகள் கேபினில் சிக்கல்: கிளம்பிய வேகத்தில் ஏர்போர்ட்டுக்கு திரும்பிய ஏர் ஏசியா விமானம்

By Siva
Google Oneindia Tamil News

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து டோக்கியோவுக்கு கிளம்பிய தாய் ஏர் ஏசியா எக்ஸ் நிறுவன விமானம் பயணிகள் இருக்கும் இடத்தில் ஏற்பட்ட சிக்கலால் கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்தது.

தாய் ஏர் ஏசியா எக்ஸ் நிறுவன விமானம் ஒன்று 330 பயணிகள் மற்றும் 13 விமான ஊழியர்களுடன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள டான் முயாங் விமான நிலைய்ததில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு செவ்வாய்க்கிழமை காலை 10.40க்கு கிளம்பியது.

AirAsia flight returns to Bangkok after 'cabin irregularity'

விமானம் கிளம்பிய ஒரு மணிநேரத்திற்குள் அதாவது 11.25 மணிக்கு டான் முயாங் விமான நிலையத்திற்கு திரும்பி வந்தது. பயணிகள் இருக்கும் இடத்தில் ஏற்பட்ட சிக்கலால் விமானம் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் என்ன சிக்கல் என்று தெரிவிக்கப்படவில்லை.

அந்த விமானத்தில் இருந்த பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மாற்று விமானம் மதியம் 12. 45 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து கிளம்பிச் சென்றது.

மலேசியாவைச் சேர்ந்த ஏர் ஏசியா விமானத்தின் துணை நிறுவனம் தான் ஏர் ஏசியா எக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Thai AirAsia X on Tuesday said a Tokyo-bound flight returned to Bangkok's Don Mueang airport less than an hour after takeoff when the airline discovered an "irregularity in the passenger cabin".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X