For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி விமானி அறையில் 2 பேர் கட்டாயம் இருக்கணும்: வருகிறது புதிய விதி

By Siva
Google Oneindia Tamil News

பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விபத்தை அடுத்து பல விமான நிறுவனங்கள் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்துகின்றன.

லுப்தான்ஸாவின் கிளை நிறுவனமான ஜெர்மன்விங்ஸின் ஏர்பஸ் ரக விமானம் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விசாரணையில் விமானத்தை துணை விமானி லுபிட்ஸ் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கியது தெரிய வந்துள்ளது.

Airlines across the world to change safety policies

விமானி அறையில் இருந்து கேப்டன் வெளியே சென்ற நேரத்தில் அந்த அறையின் கதவை பூட்டிக் கொண்டுள்ளார் லுபிட்ஸ். அறையில் தனியாக இருந்த அவர் விமானத்தை மலை மீது மோத வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் லுபிட்ஸ் உள்பட விமானத்தில் இருந்த 150 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தை அடுத்து உலக விமான நிறுவனங்கள் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்துகின்றன. அதாவது விமானி அறையில் எப்பொழுதும் இரண்டு பேர் இருக்க வேண்டும். கேப்டனோ, துணை விமானியோ விமானி அறையில் இருந்து வெளியே சென்றால் அவர்களை தனியாக இருக்க விடாமல் துணைக்கு சிப்பந்தி ஒருவர் இருக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் விமானிகள் தற்கொலை செய்ய விமானத்தை விபத்துக்குள்ளாக்குவதை தவிர்க்கலாம் என்று விமான நிறுவனங்கள் கருதுகின்றன.

English summary
After the co-pilot of the Germanwings flight premeditated the crash, airlines across the world have decided to change the cockpit rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X