For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் தூக்கிலிடப்பட்டது என் மாணவன் அஜ்மல் கசாப் அல்ல: பாக். ஆசிரியர் திடுக் வாக்குமூலம்

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் பிடிபட்டு தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் என் மாணவன் அல்ல என்று பாகிஸ்தான் ஆசிரியர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 166 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இருந்து கடல்வழியே ஊடுருவி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபட்டான்.

புனே எரவாடா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 25 வயது அஜ்மல் கசாப் கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 21-ந் தேதி ரகசியமாக தூக்கிலிடப்பட்டான். மும்பை தாக்குதலை பாகிஸ்தானியர்கள் நடத்தியதால் அந்நாட்டு நீதிமன்றத்திலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Ajmal Kasab whom I taught is alive, he wasn’t the one hanged in India, says Pakistani school teacher

இந்த தாக்குதலுக்கு உதவியாக லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் லக்வி, அப்துல் வஜித், இக்பால், ஹமாத் அமின் சாதிக், ரியாஸ், ஜமீல் அகம்து, அஞ்சும் ஆகியோரை பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் மொத்தம் 60 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் 32வது சாட்சி, இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப்பின் ஆசிரியர் என்பவர். அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் ஓகாரா மாவட்டத்தில் உள்ள பரித்கோட் ஆரம்ப பள்ளி ஆசிரியரான அவரிடம் நேற்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, நான் அஜ்மல் கசாப்புக்கு பாடம் எடுத்தது உண்மைதான். ஆனால் அது இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் அல்ல. நான் பாடம் கற்றுக் கொடுத்த அஜ்மல் கசாப் உயிரோடுதான் இருக்கிறார். தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் பெயர் எங்கள் பள்ளி ஆவணங்களில் இல்லை என்று நீதிமன்றத்திலேயே சில ஆவணங்களைக் காட்டினார்.

இதனால் இந்த வழக்கில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அப்படியானால் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் எங்கே படித்தான்? உயிரோடு உள்ள அஜ்மல் கசாப் யார்? என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது ஆசிரியரின் வாக்குமூலம்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
A teacher, who allegedly taught the 2008 Mumbai attack convict Ajmal Kasab on Wednesday told a Pakistani court that the Ajmal he knew is alive and was not the one hanged in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X