For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுற்றுலா பயணிகளின் விமானம் பாறையில் மோதி 9 பேர் பரிதாப பலி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அலாஸ்காவின் மிஸ்டி ப்ஜோர்ட்ஸ் பகுதியில் எல்லா என்கின்ற பெயருடைய ஏரி ஒன்று அமைந்துள்ளது. சுற்றுலாத் தலமான இந்த ஏரியை சுற்றிப் பார்ப்பதற்காக நேற்று 8 பேர் கொண்ட கும்பல் விமானத்தில் சென்றது.

அப்போது தரைமட்டத்திலிருந்து 800 அடி உயரத்தில் மலைப்பாறை மீது விமானம் பயங்கரமாக மோதியது. இதில் 8 பயணிகளும், விமானியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விமானம் புறப்பட்டுச் சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் அதை ஹெலிகாப்டரில் தேடும் பணி நடைபெற்றது.

அப்போது பாறையில் மோதி விமானம் சிதறி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விமானத்தில் பயணம் செய்த 8 சுற்றுலா பயணிகளும் சியாட்டில் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ள அம்மாகாண அரசு இறந்தவர்களின் சடலத்தை மீட்கும் பணி இன்று தொடங்கும் எனவும் கூறியுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A sightseeing plane company boss told of his "pain and anguish" Friday after a pilot and all eight passengers were killed in a crash in southeastern Alaska.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X