For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அல்பீனிய நோயால் குழந்தைகள் பாதிப்பு.. மூடநம்பிக்கையால் உறுப்புகள் திருட்டு.. அதிர்ச்சி ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

தான்சானியா: தான்சானியாவில் அல்பீனியம் என்ற ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் அவர்களது உறவினர்களே வெட்டி விற்பனை செய்து வருவது வேதனைமிக்க செய்தியாகும்.

தான்சானியா என்பது கிழக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு நாடாகும். இங்கு மிக உயரமான கிளிமஞ்சரோ மலை உள்ளது. இதன் மக்கள் தொகை 51.82 மில்லியன் ஆகும். இங்கு அல்பினிசம் என்ற நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகை நோய் தோல், முடி, கண்கள் ஆகியவற்றின் நிறத்தில் குறைபாடு இருக்கும். நெருங்கிய சொந்தகளுக்கிடையே திருமணம் செய்து கொண்டால் இந்த நோய் ஏற்படும். எனவே இது மரபு சார்ந்த ஒரு நோயாகும். இதில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

மூட நம்பிக்கை

மூட நம்பிக்கை

இந்த நோயால் பாதிக்கப்படுவோர் ஒவ்வொரு நிமிடத்தையும் அச்சத்துடனேயே கடந்து வருகிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் பெண் குழந்தைகளின் பிறப்புறுப்புகளை வெட்டினால் அதிர்ஷ்டம் வரும் என்று சொல்லும் அளவுக்கு மூட நம்பிக்கை இருந்து வருகிறது.

விலை பேரம்

விலை பேரம்

இதன் தொடச்சியாகவே அல்பீனியம் நோயால் பாதிக்கப்படுபவர்களின் உறுப்புகளை வைத்திருந்தால் அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என மக்கள் மூட நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனால் அல்பீனியம் நோயாளிகளை கண்மூடித்தனமாக தாக்கி, கை, கால், விரல்கள் என ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு விலை பேசி விற்கும் நிலை உள்ளது.

உறுப்புகள்

உறுப்புகள்

இதை ஒரு தொழிலாகவே கருதி மருத்துவர்களும் நன்றாக பணம் சம்பாதித்து வருகின்றனர். அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக அல்பீனியம் நோய்க்கு சிகிச்சை அளித்து அவர்களை பாதுகாக்கும் உறவினர்களே இது போல் மூடநம்பிக்கையால் அவர்களது உறுப்புகளை வெட்டி எடுக்கின்றனர்.

விழிப்புணர்வு அளிப்பது

விழிப்புணர்வு அளிப்பது

நோயாளிகளின் உறுப்புகளை வைத்திருந்தால் தங்க சுரங்கத்தில் அதிகம் தங்கம் கிடைக்கும், மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை உள்ளது. டான்சானியன் அரசும் அல்பீனியம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாப்பது, மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

16 கல்லறைகள் திருட்டு

16 கல்லறைகள் திருட்டு

இதுவரை 74 பேர் கொல்லப்பட்டதாகவும் 16 கல்லறைகள் தோண்டப்பட்டு அதிலிருந்து அவர்களது உடல் உறுப்புகள் திருடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என தெரிகிறது.

English summary
ALBINOS in Tanzania are being “hunted like animals” for money due to a brutal practice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X