For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதோ கூட்டமா ஸ்டார்ஸ் தெரியுதுல்ல.. அதுல வேற்றுக்கிரகவாசிகள் இருக்காங்களாம்...!

Google Oneindia Tamil News

லண்டன்: பெரும் கூட்டமாக இணைந்து காணப்படும் நட்சத்திரக் குவியல்களில் வேற்றுகிரகவாசிகள் வசிக்கலாம் என்று இங்கிலாந்தின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நட்சத்திரக் குவியலை குளோபுலார் ஸ்டார் கிள்ஸடர் (globular star cluster) என்பார்கள். இது பல நட்சத்திரங்கள் இணைந்த கூட்டணி ஆகும். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒன்றுக்கு ஒன்று தனது ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டிருக்கும்.

இவை ஒரு செயற்கையான கிரகம் போலவே செயல்படுபவையாகும். இப்படிப்பட்ட நட்சத்திரக் கூட்டத்தில் வேற்றுகிரக வாசிகள் வசிக்கலாம் என்று ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 ஆய்வாலர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள்.

பூமியைப் போல்...

பூமியைப் போல்...

இதுகுறித்து டாக்டர் ரோசன்நே டி ஸ்டெபானோ மற்றும் அலெக் ரே (இவர் டாடா அடிப்படை ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த இந்தியர்) ஆகியோர் கூறுகையில், ‘இந்த நட்சத்திர்க கூட்டமானது கிட்டத்தட்ட பூமியைப் போலத்தான்.

பல கோடி நட்சத்திரங்கள்...

பல கோடி நட்சத்திரங்கள்...

இத்தகைய நட்சத்திரக் கூட்டங்கள் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது கிரகமாக மாறக் கூடிய தன்மை படைத்தவை. இந்த நட்சத்திர்க கூட்டத்தில் பல கோடி நட்சத்திரங்கள் கூட இணைந்து இருக்கும்' என்றார்கள்.

ஆய்வுகள்...

ஆய்வுகள்...

இத்தகைய நட்சத்திரக் கூட்டம் குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் நடந்துள்ளன. இருப்பினும் இந்த இரு ஆய்வாளர்களும் இங்கு நிச்சயம் உயிரினங்கள் இருக்கலாம் எந்று அடித்தக் கூறுவதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேற்றுக்கிரகவாசிகள்...

வேற்றுக்கிரகவாசிகள்...

இங்குள்ல நட்சத்திரக் கூட்டத்தில் தேடிப் பார்த்தால் நிச்சயம் வேற்றுகிரகவாசிகள் குறித்த பல முக்கியத் தகவல்கள் நமக்குக் கிடைக்கலாம் என்பது இவர்களின் கருத்தாகும்.

பழமையானவை...

பழமையானவை...

இங்குள்ள நட்சத்திரங்கள் பெரும்பாலும் மிகப் பழமையானவை. ஒரு காலத்தில் வசிக்கக் கூடிய தன்மை கொண்டவையாக இருந்திருக்கும். எனவே இங்கு உயிரினங்கள் வாழ வாய்ப்புண்டு என்பது இவர்களின் கருத்தாகும்.

எனவே இனிமேல் இரவில் மொட்டை மாடிக்குப் போய் நட்சத்திரத்தை எண்ணும் போது யாராவது அங்கிருந்து கை காட்டி குட்நைட் சொன்னால் மறக்காமல் சொல்லுங்க .. சரியா

English summary
New research suggests that ancient tightly packed clump of stars found at the outer boundary of the milky way are a good bet in search for alien life. Let us find out more about the interesting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X