For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அந்தப் பாறையை பாருங்க.. யாரோ எட்டிப் பார்க்கிறது போலவே இருக்கா.. செவ்வாயில் உயிர் இருக்கு பாஸ்"

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளன என்று அடித்துக் கூறுகிறார் வேற்றுகிரகாசிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஸ்காட் வாரிங் என்ற ஆய்வாளர்.

செவ்வாய் கிரகம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியூரியாசிட்டி ரோவர், அவ்வப்போது செவ்வாய்கிரகத்தின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.

அந்தப் புகைப்படங்களை வேற்றுகிரகங்களைக் குறித்து ஆய்வு செய்து வரும் நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. அந்த வகையில் கியூரியாசிட்டி ரோவர் எடுத்து அனுப்பிய சில புகைப்படங்களை வைத்து, செவ்வாயில் உயிர்கள் உள்ளன என அடித்துக் கூறுகிறார் வாரிங்.

மர்ம உருவம்...

மர்ம உருவம்...

அங்குள்ள ஒரு பாறையைச் சுட்டிக் காட்டும் அவர், " அது ஒரு குகை என்றும், அதற்குள்ளிருந்து கியூரியாசிட்டி ரோவரை ஒரு மர்ம உருவம் எட்டிப் பார்க்கிறது பாருங்கள் என்றும் கூறியுள்ளார். அதுமனித முகம் கொண்ட உயிர்தான் என்றும் அவர் அடித்துக் கூறுகிறார்.

மீன் முகமும்...

மீன் முகமும்...

மனித உருவமும், மீன்முகமும் கொண்டதாக அந்த உயிர் இருப்பதாக கூறும் அவர், நிச்சயம் செவ்வாயில் உயிரினங்கள் உள்ளன என்பதையே இது காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

வீடு, டிரோன்...

வீடு, டிரோன்...

ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் வீடு போன்ற உருவங்கள் உள்ளதாகவும், பாறையில் மோதிக் கிடக்கும் டிரோன் இருப்பதாகவும், இன்னும் சில தகவல்களும் உலா வந்து கொண்டுள்ள நிலையில் எட்டிப் பார்க்கும் உயிரினம் குறித்துக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் வாரிங்.

குகைக்குள் இருந்து...

குகைக்குள் இருந்து...

இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் போட்டுள்ளார். அதில் ஒரு குகைக்குள் இருந்து மனித உருவம் கண்ட ஒரு உயிரினம் வெளியே எட்டி பார்ப்பதாக கூறியுள்ளார் வாரிங்.

இரண்டு வீடுகள்...

இரண்டு வீடுகள்...

மேலும் செவ்வாய் கிரகத்தில் இரண்டு வீடுகள் இருப்பது நாசாவின் புகைப்படத்தில் தெரியவந்துள்ளதாகவும் வாரிங் கூறியுள்ளார். அதுதொடர்பான புகைப்படத்தைக் காட்டிய அவர் ஒரு வீடு ஜன்னல் திறந்த நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

விளக்கம் தராத நாசா...

அதை உற்றுப் பார்த்தால் வீடு போலத்தான் தெரிகிறது. ஆனால் வழக்கம் போல நாசா இதற்கும் விளக்கம் தரவில்லை. மாறாக எல்லாம் கற்பனை பிம்பங்கள் என்று கூறி விட்டது.

English summary
A UFO researcher Scott Warring has allegedly claimed that he noticed a "fish-faced alien" peeking out of a cave in one of the recent images sent back by NASA's Curiosity Rover from the Red Planet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X