For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்வெளியில் சுற்றி பார்க்க ஆசையா.. வாய்ப்பளிக்கிறது அமேசான்.. டிக்கெட் விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி!

அமெரிக்காவை சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் என்று நிறுவனம் நியூ ஷேஃபர்ட் 2.0 என்று ராக்கெட்டை விண்ணில் ஏவி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    விண்வெளியை சுற்றிப்பார்க்க வழி செய்யும் அமேசான் நிறுவனம்- வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் என்று நிறுவனம் அடுத்த வருடத்தில் இருந்து பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. ஆனால் இதற்கு பல கோடி செலவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    பூமியில் இருந்து, பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு வெளியே சென்று மீண்டும் பாதுகாப்பாக திரும்ப மொத்தம் 2 கோடி ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும் என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.

    விண்வெளி துறையில் தனியார் வந்த பின் மிக வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. அடுத்த வருடம் விண்வெளி போக்குவரத்து மிகவும் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்க உள்ளது.

    ப்ளூ ஆர்ஜின் என்றால் என்ன

    ப்ளூ ஆர்ஜின் என்றால் என்ன

    அமெரிக்காவை சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் என்று தனியார் நிறுவனம் விண்வெளி துறையில் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் போலவே இதுவும் மிக முக்கியமான நிறுவனமாக மாறி வருகிறது. ப்ளூ ஆர்ஜின் அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனம் ஆகும். அமேசானின் ஜெஃப் பெஸோஸ்தான் இதனுடைய நிறுவனரும்.

     பயணிகளை கொண்டு செல்ல முடிவு

    பயணிகளை கொண்டு செல்ல முடிவு

    இந்த நிறுவனத்தின் ஒரே குறிக்கோள் ஆகாயத்திற்கு பயணிகளை கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம், நிலவு உட்பட மற்ற கிரகங்களுக்கு மனிதர்களை கொண்டும் செல்லும் பணியை செய்ய வேண்டும். இதற்காக ஏற்கனவே நியூ ஷேஃபர்ட் 2.0 என்று ராக்கெட்டை விண்ணில் ஏவி இருக்கிறது. இது வெற்றியும் பெற்று இருக்கிறது.

    என்ன செய்ய திட்டம்

    என்ன செய்ய திட்டம்

    இத நிலையில் வரும் வருட தொடக்கத்தில் இந்த ராக்கெட்ப் மூலம் மனிதர்களை ஆகாயத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள். ஆனால் அதிக தூரம் இல்லை. பூமியில் இருந்து,100 கிலோ மீட்டர் உயரம் வரை மட்டுமே கொண்டு செல்வார்கள்.ஆனால் இதன் மூலம் பூமி எப்படி இருக்கிறது என்று பார்க்க முடியும். இது முதற்கட்ட பயண திட்டம் மட்டும்தான் என்று அமேசான் தெரிவித்துள்ளது.

    எவ்வளவு

    எவ்வளவு

    ஆனால் இதற்கே இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இதற்காக டிக்கெட்டுக்கு கொடுக்க வேண்டும். முதற்கட்டமாக, மொத்தம் 6 பேரை அழைத்து செல்ல இருக்கிறார்கள். இவர்களை வரும் மே மாதத்திற்குள் தேர்வு செய்து விண்வெளிக்கு அழைத்து செல்வார்கள்.

    English summary
    Amazon's very own Blue Origin plans to send human to space after Blue Origin Launches New Shepard into Space successfully. It Capsule reached the Highest Test Flight ever. The travel may cost Rs.2 crore per person.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X