For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமேசான் நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Google Oneindia Tamil News

சான் பிரான்சிஸ்கோ: மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 19,800 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் உலகம் முழுவதும் 1.37 மில்லியன் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் சுமார் 19,800 பேர் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேநேரம் அமெரிக்காவில் எதிர்பார்த்ததைவிட குறைவான அளவே பாதிப்பு ஏறபட்டதாக அமேசான் தெரிவித்துள்ளது.

Amazon Says Nearly 20,000 Of Its Employees Tested Positive For COVID-19

அமேசான் நிறுவனம் கொரோனவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் தகவல்களை வெளியிடுவதில் ரகசியம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் அங்கு பயிற்றும் சில தொழிலாளர்கள், தொற்றுநோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்க நிறுவனத்தின் பாதுகாப்பு செயல்பாடுகள் பற்றியும், நோய்த்தொற்றுக்குள்ளாகும் சக ஊழியர்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அமேசான் தயங்குவது பற்றியும் விமர்சித்தனர். இதையடுத்தே அமேசான் நிறுவனம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்கள் ஊழியர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் 650 மையங்களில் ஒரு நாளைக்கு 50,000 சோதனைகளை நடத்தி வருகிறது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "இந்த நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து, எங்கள் ஊழியர்களுக்கு அவர்களின் கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு புதிய தொற்று பாதிப்பை அவர்களுக்குத் தெரிவிக்க நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளது.

அமேசான் மற்றும் ஹோல் ஃபுட்ஸ் தொழிலாளர்களிடையே கொரோனா நோய்த்தொற்றின் வீதம் அமெரிக்க மக்கள் தொகைக்கு ஏற்பட்டிருந்தால், அந்த எண்ணிக்கை 33,000த்தை தாண்டி இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Amazon on Thursday said that slightly more than 19,800 of its employees have tested positive for Covid-19 since the start of March.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X