For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”அமெரிக்க தீவில் 60 ஆண்டுகளாக தொடரும் கதிர்வீச்சு அபாயம்”

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்கா செய்த அணுகுண்டு பரிசோதனையால் 60 ஆண்டுகளாக அமெரிக்க தீவில் கதிர்வீச்சு அபாயம் நிலவுகிறது.

அமெரிக்காவில் மார்ஷல் தீவுகள் உள்ளன. அங்கு பிகினி அடோல் என்ற இடத்தில் கடந்த 1954 ஆம் ஆண்டு அமெரிக்கா அணுகுண்டு வீசி சோதனை நடத்தியது.

அது ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசிய அணுகுண்டைவிட 1000 மடங்குக்கு மேல் சக்தி வாய்ந்தது. அங்கு அணுகுண்டு வீசப்பட்டதால் மார்ஷல் தீவுகளும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் கதிர்வீச்சு அபாயத்தால் பாதிக்கப்பட்டது.

எனவே, பிகினி அடோல் மற்றும் அதை சுற்றி தங்கியிருந்த மக்கள் வெளியேறினர். குண்டுவீச்சு நடத்திய 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அங்கு சென்று குடியேறினர்.

America’s island till suffered by atomic radiation…

பின்னர் அங்கிருந்து வெளியேறி வேறு பகுதிகளில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இன்னும் அப்பகுதியில் கதிர்வீச்சு தாக்கம் உள்ளது. அதனால் தங்களது வாழ்வும், சந்ததியினரின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர்.

அணுகுண்டு சோதனை நடத்தியதால் ஏற்பட்ட கதிர் வீச்சு பாதிப்புக்காக மார்ஷல் தீவுக்கு அமெரிக்கா 150 மில்லியன் டாலர் நஷ்டஈடாக வழங்கியது.

இங்கு அணுகுண்டு சோதனையை அமெரிக்கா நடத்தி நேற்றுடன் 60 ஆண்டுகள் ஆகிறது. அதுபற்றிய நினைவு தினம் மார்ஷல் தீவின் தலைநகர் மஜுரோவில் கடைபிடிக்கப்பட்டது. இருந்தும் இன்னும் அங்கு கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர்.

English summary
USA researches its atomic power in Marshal Island in the year of 1954. 60 years later till that island suffered by atomic radiation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X