For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா பெயரில் அமெரிக்காவில் சேவை மையம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் சேவை மையம் தொடங்கபட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:இந்த மையம் மூலம் அமெரிக்கா மற்றும் கனடா வில் சமூக சேவைகள் செய்யப் பட உள்ளன.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மறைந்த ஜெயலலிதா பெயரில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் சமூக சேவைகள் செய்யப்பட உள்ளன.

America 's MPs launch Service center in Jayalalithaa name

இந்த மையத்தை அமெரிக்க எம்.பி.க்கள் இல்லினாய்சை சேர்ந்த டேன்னி கே. டேவிஸ் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கியுள்ளனர்.

இவர்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இதன் தலைமை அலுவலகம் இல்லினாய்சில் உள்ள சிகாகோவில் உள்ளது.

தொடக்க விழாவின் போது ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து நடந்த விழாவில் டேன்னி டேவிஸ் பேசும் போது 'ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள் உலக அளவில் மக்களை கவர்ந்த திட்டங்கள் என்றார். இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த உள்ளோம் என்று பேசினார்.

English summary
The US MPs was launched jayalalithaa's service center for women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X