For Daily Alerts
Just In
பாடல் பாடி.. செயின்ட் லூயிஸ் நகரில் அனிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி!
செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் வாழும் தமிழர்கள் நீட் மரணத்துக்கு எதிராக மரணித்த அனிதாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நீட் தேர்வால் தன் மருத்துவக் கனவு சிதைந்ததால் அரியலூர் குழுமூரில் அனிதா தர்கொலை செய்துகொண்டார். இது தமிழகத்தில் மட்டுமில்லாது கடல் கடந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை மேற்படுத்தியது.

இந்நிலையில், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அனிதாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும், பாட்டுப் பாடியும் அஞ்சலி செலுத்தினர்.
செயின்ட் லூயிஸ் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் தமிழக மாணவ மாணவியருக்கு தாங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதையும் விவாதித்தனர்.
செய்தி - படம்: முத்துராமன்