For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாப்ட்வேர் கோளாறால் தப்பான விமானத்தை இயக்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ்! அதிர்ச்சியில் பயணிகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஹவாலி பகுதிக்கு தவறுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவுகொண்ட வேறு விமானத்தை இயக்கிய சம்பவம் ஏர்லைன்ஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து ஹவாலிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், ஏ321ஹெச் வகை விமானம் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், ஆகஸ்ட் 31ம் தேதி, ஏ321எஸ் வகை விமானம் ஹவாலிக்கு இயக்கப்பட்டுள்ளது. இதை பிரைன் சுமேர்ஸ் என்பவர் தனது பிளாக்கில் பதிவு செய்திருந்தார். இதன்பிறகு உலகத்திற்கு அச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

American Airlines wrongly sends wrong plane to Hawaii

அமெரிக்க ஏர்லைன்ஸ் செய்தித்தொடர்பாளர் கேசி நோர்டனிடம் நிருபர்கள் இதுகுறித்து கேட்டதற்கு, "அந்த தகவல் உண்மைதான். ஏ321எஸ் மற்றும் ஹெச் வகை விமானங்களில் ஒரே மாதிரியான இன்ஜின், எரிபொருள் டேங்கர், ரேஞ்ச் போன்றவை ஒரே மாதிரியானவைதான். ஆனால், ஹெச் வகை விமானத்தில், கூடுதல் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தீயணைப்பு கருவிகள் இருக்கும்.

ஹவாலிக்கு பயணிக்கும் விமானங்கள் கடல் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதால், கூடுதல் பாதுகாப்புக்காக, அவற்றுக்கு ஏ321ஹெச் வகை விமானங்கள்தான் இயக்கப்படும். ஆனால், சாப்ட்வேர் பிரச்சினை காரணமாக, எஸ் வகை விமானம், ஷெட்யூல் ஆகிவிட்டது" என்றார்.

English summary
American Airlines accidentally sent the wrong plane across the ocean from Los Angeles to Hawaii, a company spokesperson confirmed on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X