For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க தொழிலதிபரின் பம்பர் பரிசு.. 430 மாணவர்களின் வாழ்க்கை ஒரே நொடியில் மாற்றம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களின் சுமார் ரூ.278 கோடி கல்வி கடனை ஏற்பதாக தொழிலதிபர் அறிவித்தால் 430 மாணவர்களின் வாழ்க்கை ஒரே நொடியில் மாறியது. மாணவர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கி திளைத்தனர்.

அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் மோர்ஹவுஸ் கல்லூரி இயங்கி வருகிறது இந்த கல்லூரி கருப்பின மாணவர்களுக்கான கல்லூரி ஆகும்.

American Billionaire Robert F. Smith Accept to pay 430 students education loan in usa college

இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதால் வங்கிகளில் கல்விக்கடன் பெற்றுதான் படித்த வருகிறார்கள். இந்த கல்லூரியில் 2019ம் ஆண்டுக்கா பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் 430 மாணவர்கள் கலந்து கொண்டு பட்டம் பெற்றார்கள்

இந்த விழாவில் பங்கேற்ற தொழில் அதிபர் ராபர்ட் எப் ஸ்மித் பங்கேறு பேசுகையில், " எங்கள் குடும்பம் 8 தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகிறது. நாங்கள் உங்களுக்கு (மாணவர்களுக்கு) வாழ்க்கை என்ற பயணத்துக்கான எரிபொருளை கொடுக்க முடிவு செய்து இருக்கிறோம். 2019ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்களின் கல்விக்கடனை இனி நான் அடைக்கிறேன். என்னைப்போல் இனி வரும் காலங்களில் இன்றைய மாணவர்களும் இதேபோன்ற பணியினை செய்வார்கள் என நம்புகிறேன்" என்றார்.

லட்டு மோடி எங்கே.. ஜாங்கிரி மோடியை எங்கப்பா காணோம்.. கலகலக்கும் மும்பை ஸ்வீட் கடை! லட்டு மோடி எங்கே.. ஜாங்கிரி மோடியை எங்கப்பா காணோம்.. கலகலக்கும் மும்பை ஸ்வீட் கடை!

இவரது அறிவிப்பை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர் வடித்து மகிழ்ச்சியில் திளைத்தனர். அங்கு பயின்று பட்டம் பெற்ற மாணவர்களின் கல்வி கடன் தொகை 400 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 278 கோடி ரூபாய்) ஆகும். அந்த கடனை தொழிலதிபர் ராபர்ட் ஏற்றுக்கொண்டு இருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Billionaire Robert F. Smith pledges to pay student loan debt at Morehouse College in Atlanta‘
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X