For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க கம்ப்யூட்டர்களில் புகுந்து விளையாடியது சீனாவா ? !! முக்கிய தகவல்கள் திருட்டு!!!

Google Oneindia Tamil News

வாஷங்டன்: அமெரிக்க அரசு அலுவலர்கள் பயன்படுத்தும் 40 லட்சம் கம்ப்யூட்டர்கள் "ஹேக்' செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதற்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.

அமெரிக்காவின் கம்ப்யூட்டர்களை அவ்வப்போது "ஹேக்' செய்வது சீனாவின் வழக்கம். நேற்று அமெரிக்காவின் 40 லட்சம் அரசு அலுவலர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் "ஹேக்' செய்யப்பட்டன.

computer hack

அரசு அலுவலர்கள் பற்றிய விபரங்கள், குடியுரிமை, பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் கம்ப்யூட்டர்களில் இருந்து திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உலகிலேயே பெரிய கம்ப்யூட்டர் "ஹேக்' ஆக இது கருதப்படுகிறது.

ஒரு வெளிநாட்டு அமைப்போ அல்லது அரசோ தான் இதை செய்திருக்க வேண்டும் என்று அமெரிக்க சட்ட அமலாக்க துறை கூறியுள்ளது. நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், தகவல் தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாக விளங்கும் சீனாவைத் தான் அமெரிக்கா சந்தேகிக்கிறது.

இந்த திருட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமெரிக்கா புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. கூறியுள்ளது.

என்ன மாதிரியான தகவல்கள் எல்லாம் திருடப்பட்டுள்ளன என்ற விபரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த மாதம் இதே போன்ற பிரச்னை வந்தபோது, சீனாவிடம் அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. ஆனால் இதற்கு சீனா முறையான பதில் அளிக்கவில்லை.

English summary
In America Four million current and former federal employees, might have had their personal information stolen by Chinese hackers, U.S. investigators said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X