For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறந்த மனிதர் விருது விவகாரம்: பேட்டி கொடுக்க மறுத்த அதிபர் ட்ரம்ப் - பதிலடி கொடுத்த டைம்!

டைம் பத்திரிகைக்கு பேட்டு கொடுக்க மறுத்துள்ளதாக ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

நியூயார்க் : இந்த ஆண்டிற்கான சிறந்த நபர் விருது கிடைத்தாலும், தான் தற்போது டைம் பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பதாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பிரபலமான பத்திரிக்கை தி டைம். உலக அளவிலும் இந்த பத்திரிகை முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. டைம் பத்திரிகை ஆண்டுதோறும் தனது துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை அடையாளப்படுத்தி வருகிறது. இது பிரபலங்களுக்கான முக்கியமான அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

American President Donald Trump rejects The Times Interview and Photoshoot

இந்த அடிப்படையில் கடந்த ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் எதிர்பார்க்காத அளவில், மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவருக்கு டைம் பத்திரிகையின் விருது வழங்கப்பட்டது.தற்போது இந்த ஆண்டிற்கான கருத்துக்கணிப்பு நடந்து வருகிறது. அதில் டொனால்டு ட்ரம்ப் முன்னணியில் இருக்கிறார்.

இந்நிலையில், ட்ரம்ப் இது தொடர்பாக ட்விட் செய்துள்ளார். ட்ரம்ப் தனது ட்விட்டில், டைம் பத்திரிகை என்னிடம் பேட்டி எடுக்கவும், போட்டோ-ஷூட் செய்யவும் அனுமதி கேட்டார்கள். டைம் சிறந்த மனிதர் விருது இந்த ஆண்டும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்கள். ஆனால், நான் அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து விட்டேன் என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.

இதை டைம் பத்திரிகை மறுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது. அதில் ட்ரம்ப் டைம் பத்திரிகை எவ்வாறு சிறந்த மனிதர்கள் விருதிற்கான நபர்களை தேர்ந்தெடுக்கிறது என்பது தெரியாமல் பேசி இருக்கிறார். இருப்பினும் டிசம்பர் 6ம் தேதி விருது அறிவிக்கப்படும் வரை நாங்கள் கருத்து எதுவும் தெரிவிப்பதாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

English summary
American President Donald Trump rejects The Times Interview and Photoshoot. He was the Times Man of The Year in 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X