For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி ஆட்சியில் கருத்துரிமையை ஒடுக்கும் நடவடிக்கைகள்- ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: பிரதமர் மோடியின் ஆட்சியில் கருத்துரிமையை ஒடுக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆம்னஸ்டி அமைப்பின் 2015-ம் ஆண்டுக்கான அறிக்கையில், நரேந்திர மோடியின் ஆட்சியில் மத வன்முறை அதிகரித்து உள்ளது. அதன் நிலம் கையகபடுத்தும் சட்டம் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர் சொந்த வாழ்விடத்தில் இருந்து வெளியேறறபடும் ஆபத்து இருக்கிறது.

Amnesty criticises Modi govt's rights record

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மதரீதியான மோதல் இந்து- முஸ்லிம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்து அமைப்புகள் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத ரீதியான வன்முறை தொடர்ந்து அதிரித்து வருகின்றன. ஊழல், சாதி ரீதியான பாகுபாடு மற்றும் வன்முறை போன்றவை பல பகுதிகளிலும் பரவி இருக்கிறது.

மக்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் கருத்துரிமையை ஒடுக்கும் நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படுகிறது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Human rights group Amnesty International today criticised the Narendra Modi-led government, saying under the new regime India has witnessed a rise in communal violence and its Land Acquisition Ordinance has put thousands of Indians at "risk" of forcible eviction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X