For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபச்சாரம் செய்வது மனித உரிமை.. தீர்மானம் நிறைவேற்றபோகிறது அம்னஸ்டி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டப்ளின்: விபச்சாரத்தை மனித உரிமையாக அங்கீகரிக்க அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு முயற்சி செய்துவருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில், அடுத்த வாரம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின், கவுன்சில் மீட்டிங் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், நிறைவேற்றப்பட உள்ள முக்கிய தீர்மானத்தில் ஒன்று, விபச்சாரத்தை மனித உரிமையாக அங்கீகாரம் செய்ய வேண்டும் என்பதாகும்.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் உறுப்பினர்கள், இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தொழில்

தொழில்

உலகமெங்கும் இருந்து அந்த அமைப்பின் உறுப்பினர்கள் டப்ளின் வர உள்ள நிலையில், இந்த தீர்மான 'வரைவு' சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பை பொறுத்தளவில், பிற தொழில்களை போலவே, பெண்கள், விபச்சாரத்தையும் தொழிலாக நினைத்து செய்யலாம். அதில் தப்பில்லை என்ற வாதத்தை முன்வைக்கிறது.

பெண் சுதந்திரம்

பெண் சுதந்திரம்

பெண் சுதந்திரம் என்ற பெயரில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்த வரைவை முன் வைக்கிறது. பெண்ணுக்கு பிடித்திருந்தால், அவள் இதை சுதந்திரமாக செய்யலாம். இதில் தலையிட வேறு யாருக்கும் உரிமை கிடையாது என்கிறது அம்னஸ்டி அமைப்பு.

வறுமைக்கு விளக்கம்

வறுமைக்கு விளக்கம்

ஆனால், ஐரோப்பிய பத்திரிகைகள் பலவும், இந்த வரைவிலுள்ள குறைபாடுகளை முன்வைக்கின்றன. ஒரு பெண் வேறு வழியில்லாமல், விபச்சாரத்திற்கு வந்தாலும், அதையும் மனித உரிமையாக எடுக்க முடியாது என்கின்றன, மேற்கத்திய ஊடகங்கள். உதாரணத்திற்கு, வறுமையின் காரணமாக, ஒரு பெண் வேறு வழியின்றி, விபச்சாரம் செய்தால், அது மனித உரிமையாக பார்க்கப்படுமா என்பதில் விளக்கம் தேவைப்படுவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஏனெனில் பெரும்பாலான விபச்சாரம், வயிற்று பிழைப்புக்காகவே நடப்பதாக அவை சுட்டி காட்டுகின்றன.

கடத்தல்

கடத்தல்

எந்த பெண்ணும், ஆணுக்கு சமமாக நானும் பலருடன் உறவு கொண்டேன் என்று காண்பிக்க விரும்பி விபச்சாரம் செய்வதில்லை. கடத்தல், வறுமை போன்ற பல காரணங்கள் அதிலுள்ளன. அப்படியிருக்கும்போது, விபச்சாரம் செய்வது மனித உரிமை என்று கூறுவதை ஏற்க முடியாது என்கின்றன ஊடகங்கள். அம்னஸ்டி இன்டர்நேஷனல் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Amnesty International, the human rights nonprofit convenes its International Council Meeting next week in Dublin, delegates from around the world will be asked to vote on a proposal to recognize prostitution as a human right.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X