For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூயார்க் டூ பிலடெல்பியா ரயில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி... 50 பேர் படுகாயம்

Google Oneindia Tamil News

பிலடெல்பியா: அமெரிக்காவில் நியூயார்க்கில் இருந்து பிலடெல்பியா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், பிலடெல்பியா அருகி தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இந்த ரயிலில் 250 பயணிகள் வரை பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், மற்ற பயணிகளையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Amtrak train crashes in Philadelphia, multiple injuries reported

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாண ரயில் (எண் 188) வாஷிங்டன்னிலிருந்து நியூயார்க்கிற்கு நேற்று மாலை பயணித்தது. சரியாக பிலடெல்பியாவின் மையப் பகுதியை நெருங்கியபோது 9.30 மணியளவில் தடம் புரண்டது. தண்டாவாளத்திலிருந்து ஓரப்பகுதிக்கு தள்ளப்பட்டது ரயில்.

இந்த விபத்தில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் டெம்பிள் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

ஏற்கனவே கடந்த ஞாயிறன்று இதே போன்று ஒரு ரயில் நியூ ஆர்லயன்ஸில் விபத்துக்குள்ளானதில் டிரக் டிரைவர் ஒருவர் உயிரிழந்தார். ரயிலில் இருந்த பயணிகளில் இருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Several people reportedly were injured after an Amtrak train crashed in Philadelphia Tuesday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X