For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

50 வன்புணர்வு.. 12 கொலை.. 40 வருட முடிச்சை அவிழ்த்த டிஎன்ஏ.. கைதானான் கலிபோர்னியா சீரியல் கில்லர்

By Shyamsundar
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் தொடர் கொலைகள் செய்து வந்த, ஜோசப் ஜேம்ஸ் டி ஏஞ்சலோ தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறான்.

டிஎன்ஏ தொழில்நுட்பம் மூலம் வித்தியாசமாக இவன் கைது செய்யப்பட்டு இருக்கிறான். போலீஸ் பழைய முக்கியமான வழக்குகளை, குற்றங்களை தற்போது டிஎன்ஏ தொழில்நுட்பம் மூலம் சோதனை செய்து வருகிறது.

ஏதாவது டிஎன்ஏ மாதிரிகள் கிடைக்குமா, குற்றவாளியை கண்டுபிடிக்க முடியுமா என்று சோதனை செய்கிறது. கிட்டத்தட்ட 90 சதவிகித அமெரிக்க மக்களின் டிஎன்ஏ போலீஸ் தரப்பிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்த கொலை

தொடர்ந்த கொலை

கலிபோர்னியாவில் பல இடங்களில் கடந்த 1976 முதல் 1986 வரை தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. 18 வயது சிறுமி முதலில் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதன்பின் தொடர்ச்சியாக கொலை நடந்தது. மொத்தமாக 50 வன்புணர்வுகள், 12 வன்புணர்வு கொலைகள் இந்த காலத்தில் செய்யப்பட்டது. மொத்தம் பத்து வருடம் இந்த கொடூரம் நிகழ்ந்தது.

யார் இவர்

யார் இவர்

ஆனால் பின் திடீர் என்று இந்த கொலை நடைபெறுவது நின்றது. சரியாக 10 வருடம் கலிபோர்னியாவை ஆட்டிப்படைத்த கொடூரம் முடிந்தது. ஆனால் கொலைகாரன் யார் என்று போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான், இந்த கொலைகளை செய்தது, ஜோசப் ஜேம்ஸ் டி ஏஞ்சலோ என்பவன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவன் முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

போலீஸ் இப்பொது சில முக்கியமான பழைய வழக்குகளை விசாரித்து வருகிறது. அதன்படி இந்த தொடர் கொலைகள் குறித்து மீண்டும் விசாரித்த போது, 12 கொலையில், 1 கொலை சம்பவத்தில் மரணம் அடைந்த பெண்ணின் டிஎன்ஏ மட்டுமில்லாமல் இன்னொரு ஆணின் டிஎன்ஏவும் கிடைத்து இருக்கிறது. தற்போது அதை சோதனை செய்து பார்த்தால் என்ன என்று சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள்.

கண்டுபிடித்தனர்

கண்டுபிடித்தனர்

இந்த டிஎன்ஏ மூலம், ஏஞ்சலோவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கண்டுபிக்கப்பட்டார். பின் அதை வைத்து ஆராய்ச்சி செய்து போலீஸ் ஏஞ்சலோவை பிடித்தது. பின் விசாரணையில் ஏஞ்சலோ அவர் செய்த கொலைகளை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு சிறிய ரத்த மாதிரி 40 வருட வழக்கை முடிவிற்கு கொண்டு வந்தது, போலீசுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
An American serial killer named Joseph James DeAngelo arrested after 40-years using a DNA sample. He was the one who killed 12 people and raped 50 woman and girls in between 1976 to 1986.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X