For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாரே வாவ்.. 10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்.. முழுக்க முழுக்க வைரத்தால் ஆன அதிசயம்!

10 வருடங்களுக்கு முன்பு பூமியில் விழுந்த எரிநட்சத்திரம் ஒன்றில், முழுக்க முழுக்க வைரம் இருந்துள்ளது தற்போது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்- வீடியோ

    நியூயார்க்: 10 வருடங்களுக்கு முன்பு பூமியில் விழுந்த எரிநட்சத்திரம் ஒன்றில், முழுக்க முழுக்க வைரம் இருந்துள்ளது தற்போது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சூடானில் இருக்கும் ''கார்ட்டோம்'' பல்கலைக்கழக மாணவர்கள், அந்த எரி நட்சத்திர துகள்களில் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. சூடானில் இருக்கும் நுபியன் பாலைவனத்தில்தான் இந்த நட்சத்திரம் விழுந்தது.

    இந்த நட்சத்திரத்தை ஆராய்ச்சி செய்ததில் இருந்து பல முக்கியமான தகவல்கள் வெளியே வந்துள்ளது. மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்பது கூட இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த நட்சத்திரத்திற்கு ஆல்மஹாட்டா சிட்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    எப்படி வந்தது

    எப்படி வந்தது

    சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளியில் நாசா அமைத்துக் கொண்டு இருந்த ஆராய்ச்சி மையம், பூமியை நோக்கி எரிநட்சத்திரம் ஒன்று வந்ததை கண்டுபிடித்தது. ஆனால் அந்த எரிநட்சத்திரம் பூமியை நெருங்குவதற்கு முன்பு சில கிமீ தூரத்தில் வெடித்து சிதறியது. ஆனாலும் பூமிக்குள் நுழைந்தது, சூடானின் நுபியன் பாலைவனத்தில்தான் பாதி எரிந்த நிலையில் விழுந்தது.

    ஆராய்ச்சி செய்தார்கள்

    ஆராய்ச்சி செய்தார்கள்

    இதை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூடானில் இருக்கும் ''கார்ட்டோம்'' பல்கலைக்கழக மாணவர்கள் அரசிடம் இருந்து வாங்கி ஆராய்ச்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சியின் படி இதில் முழுக்க முழுக்க வைரம் நிரம்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆல்மஹாட்டா சிட்டா நட்சத்திரம் உடற்பகுதி முழுக்க சிறுசிறு வைர கற்கள் இருந்துள்ளது.

    எப்படி வைரம்

    எப்படி வைரம்

    இந்த எரிநட்சத்திரம் வெடித்த போது வைரம் உருவாகி இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே ஆல்மஹாட்டா சிட்டாவில் வைரம் இருந்திருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தை போல மிகவும் தூய்மையான வைரத்தை இதுவரை பார்த்தது இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதில் எந்தவிதமான அசுத்தமும் கலக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    எந்த வருடம்

    எந்த வருடம்

    இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த வைரம் பூமி தோன்றும் முன்பே உருவாகி இருக்கலாம் என்று கூறியுள்ளனர். அதன்படி நட்சத்திரங்கள் மோதி எப்படி சூரிய குடும்பம் உருவானதோ, அப்போது தான் இந்த ஆல்மஹாட்டா சிட்டா எரிநட்சத்திரம் உருவாகி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சரியாக சொல்லவேண்டும் என்றால் பூமி உருவான அதே நாளில்!

    English summary
    An Asteroid hit Earth 10 years ago, has found to have lots of Diamond inside it. It hit in Sudan. Sundau researchers, found daimonds inside the asteroid.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X