For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

61,155 கிமீ வேகத்தில் தென்னாப்பிரிக்காவில் விழுந்த விண்கல்.. சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்!

தென்னாப்பிரிக்காவில் விழுந்து வெடித்த விண்கல் ஒன்றின் வீடியோ வெளியாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    61,155 கிமீ வேகத்தில் தென்னாப்பிரிக்காவில் விழுந்த விண்கல்..வீடியோ

    கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் விழுந்து வெடித்த விண்கல் ஒன்றின் வீடியோ வெளியாகி உள்ளது.

    2018 எல்ஏ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த விண்கல் தென்னாப்பிரிக்காவின் கிராமம் ஒன்றில் விழுந்துள்ளது. அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்த விண்கலத்தின் பாகங்களை கைப்பற்றி சோதனை செய்து வருகிறது.

    இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. சிசிடிவியில் பாதிவான காட்சிகள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளது.

    பூமியை நோக்கி

    பூமியை நோக்கி

    இந்த 2018 எல்ஏ முதலில் பூமியை விட மிகவும் அதிக தூரத்தில் இருந்துள்ளது. இந்த வருட தொடக்கத்தில் சரியாக 384,600 கிமீ தூரத்தில் இருந்துள்ளது. சரியாக நிலவு தூரத்தில் இருந்துள்ளது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது பூமியை நோக்கி வந்துள்ளது. அதே சமயம் பூமியை நோக்கி வர வர அதன் அளவும் குறைந்து கொண்டே வந்துள்ளது.

    எந்த இடத்தில்

    எந்த இடத்தில்

    இந்த நிலையில் இந்த வாரம் அது பூமியில் மோதும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் பூமியில் எந்த பகுதியில் இந்த விண்கல் விழும் என்று நாசா கணிக்க முடியாமல் திணறியது. கடைசியில் கடந்த சனிக்கிழமை அன்று, இந்த விண்கல் தென்னாப்பிரிக்காவில் விழ வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவின் எந்த பகுதியில் விழ போகிறது என்று தெரிவிக்கவில்லை.

    கிராமம்

    இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் போட்ஸ்வனா நகரத்திற்கு அருகில் இருக்கும் கிராமம் ஒன்றில் இந்த விண்கல் விழுந்துள்ளது. சரியாக 61,155 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த விண்கல் விழுந்துள்ளது. சரியாக ஒரு நொடிக்கு 17 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த விண்கல் பயணம் செய்துள்ளது.

    பாதிப்பு

    இது பூமியில் நுழைந்த உடன் தீ பற்றியுள்ளது. இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. பொருட்கள் எதுவும் சேதமடையவில்லை. விண்கல் விழுந்த பகுதியை தற்போது நாசா ஆய்வு செய்து வருகிறது. இந்த விண்கல் விழும் சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகி உள்ளது.

    English summary
    An Asteroid hit South Africa, Video of CCTV released. The asteroid hit over the Southern African nation of Botswana at 61,155 km/h.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X