For Daily Alerts
Just In
பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு
கராச்சி: ரிக்டர் அளவில் 4.8 என்ற அளவுக்கான நிலநடுக்கம் திங்கள்கிழமை காலை பாகிஸ்தானில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் திங்கள்கிழமை அதிகாலை 4:14 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

அட்சரேகை: 36.13 மற்றும் தீர்க்கரேகை: 71.97, ஆழம்: 10 கி.மீ, இடம்: பாகிஸ்தான் என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் ட்வீட் செய்துள்ளது. நகர் அல்லது ஊரின் பெயர் ட்வீட்டில் தெரிவிக்கப்படவில்லை.
அதேநேரம், இந்த மிதமான ஒரு நிலநடுக்கத்தால், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.