For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக்கொலை!

அமெரிக்கவில் கொள்ளையர்களால் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவில் கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக்கொலை!- வீடியோ

    ஓஹியோ: அமெரிக்கவில் கொள்ளையர்களால் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஃபேஃபீல்டு பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த கர்ணாகர் கரேங்களே என்பவர் வசித்து வருகிறார். 53 வயதான இவர் அப்பகுதியில் உள்ள மார்ட்டில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு அவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது துப்பாக்கியுடன் அங்கு வத்த முகமூடி கொள்ளையர்கள் கர்ணாகரை துப்பாக்கியால் சுட்டனர்.

    துப்பாக்கிச்சூட்டில் படுகாயம்

    துப்பாக்கிச்சூட்டில் படுகாயம்

    இதில் கர்ணகர் பலத்த காயமடைந்தார். இதையடுத்த சம்பவ இடத்துக்கு வந்த ஃபேர்ஃபீல்டு போலீசார் கர்ணாகரை மீட்டு யூசி வெஸ் செஸ்டர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    சிகிச்சைப்பலனின்றி பலி

    சிகிச்சைப்பலனின்றி பலி

    அவருக்கு கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கர்ணாகர் நேற்று சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

    இந்தியாவுக்கு தகவல்

    இந்தியாவுக்கு தகவல்

    அவரின் உறவினர்கள் யாரும் அமெரிக்காவில் வசிப்பதாக தெரியவில்லை. இதையடுத்து இந்தியாவில் உள்ள கர்ணாகரின் உறவினர்களுக்கு ஃபேர்ஃபீல்டு போலீசார் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பிடிப்பதில் சிரமம்

    பிடிப்பதில் சிரமம்

    கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ஒரு கொள்ளையன் டார்க் நிற ஜாக்கெட்டும் மற்றொரு கொள்ளையன் லைட் நிற ஜாக்கெட் அணிந்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய மாணவர் மீது துப்பாக்கிச்சூடு

    இந்திய மாணவர் மீது துப்பாக்கிச்சூடு

    அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கப்படுவதும் சுட்டுக்கொல்லப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது. அண்மையில் அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அக்பர் என்ற இந்திய மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சாஃப்ட்வேர் என்ஜினியர் கொலை

    சாஃப்ட்வேர் என்ஜினியர் கொலை

    கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற சாஃப்ட்வேர் என்ஜினியர் சுட்டுக்கொல்லப்பட்டார். பாருக்கு சென்ற அவரை உங்கள் நாட்டுக்கு செல் என கூறி மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    சீக்கியர் மீது துப்பாக்கிச்சூடு

    சீக்கியர் மீது துப்பாக்கிச்சூடு

    இந்த சம்பவம் நடந்த அடுத்த சில வாரங்களிலேயே வாஷிங்டனின் கென்ட் பகுதியில் இந்தியாவை சேர்ந்த சீக்கியர் ஒருவரை சொந்த நாட்டுக்கு செல்லக்கோரி மர்மகும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    14,763 பேர் பலி

    14,763 பேர் பலி

    2017ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 58,491 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் 14,763 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 29,888 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    An Indian-origin man has been killed by robbers in Ohio. Karunakar Karengle, 53, was working last Monday at the Jiffy Convenience Mart.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X