For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எகிப்தில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி கண்டுபிடிப்பு!

Google Oneindia Tamil News

கெய்ரோ எகிப்தில் லக்ஸர் நகர் அருகே பூமிக்கடியில் சுரங்க அறையில் வைக்கப்பட்டிருந்த 2500 ஆண்டுகளுக்கு முந்தையை மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மம்மிக்களும் பிரமிடுகளும் நிறைந்த எகிப்தில் ஸ்பெயின் தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் கெய்ரோவிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நைல் நதியின் மேற்கு கரைப் பகுதியில் மம்மிக்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Ancient Egyptian mummy discovered in 'very good condition'

அப்போது பூமிக்கடியில் உள்ள ஒரு சுரங்க அறையை ஆய்வு செய்த அவர்கள் அதில் பல வண்ணம் தீட்டப்பட்ட அழகிய கலை நயத்துடன் வைக்கப்பட்டிருந்த மம்மியை கண்டுபிடித்தனர்.

இந்த மம்மி நல்ல நிலையில் இருப்பதாக கூறிய ஆராய்ச்சியாளர்கள், இது அரண்மணையில் பணிபுரிந்த வேலைக்காரரின் உடலாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மரம் மற்றும் கல்லைக்கொண்டு செய்யப்பட்டுள்ள இந்த சவப்பெட்டியில் பண்டைய எகிப்தின் மத சின்னங்கள் மற்றும் பெண் கடவுளின் உருவம் உள்ளிட்டவை பல வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளது.

மம்மியின் உடல் பிளாஸ்டர் கொண்டு சுற்றப்பட்டுள்ளது. மன்னர் மூன்றாம் தட்மோஸ் காலத்தில் கட்டப்பட்ட கோவிலின் அருகில் இந்த மம்மி வைக்கப்பட்டுள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த மம்மியின் சவப்பெட்டி இன்றளவும் பழுதடையாமல் பிரகாசமாக இருப்பதாகவும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை எகிப்து தொல்பொருள் துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

English summary
Spanish archaeologists discover mummy at least 2500 years old in very good condition near luxor in Egypt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X