For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காய்ச்சல் அடிச்சதால் விட்டுட்டு போயிட்டீங்களே.. எனக்கு கல்யாணம்ங்க.. சீனாவில் கதறும் ஆந்திர பெண்

Google Oneindia Tamil News

Recommended Video

    காய்ச்சல் அடிச்சதால் விட்டுட்டு போயிட்டீங்களே.. எனக்கு கல்யாணம்ங்க.. சீனாவில் கதறும் ஆந்திர பெண் - வீடியோ

    பெய்ஜிங்: எனக்கு 18ம் தேதி கல்யாணம்.. எப்படியாவது இந்தியா அழைத்துச் செல்லுங்கள் என அதிகாரிகளுக்கு சீனாவிலிருந்தபடி வீடியோவில் கோரிக்கை வைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்.

    வுஹான் மாகாணத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்தியா சிறப்பு விமானம் மூலமாக தாயகம் அழைத்து வந்தது. அப்போது அதிகமாக காய்ச்சல் அடிப்பதை காரணம் காட்டி, "நீங்கள் எங்களோடு வர வேண்டாம்" என கர்னூலை பூர்வீகமாக கொண்ட அன்னம் ஜோதியை அங்கேயே அதிகாரிகள் விட்டுவிட்டு வந்துள்ளனர்.

    இவர் டிசிஎஸ் நிறுவனத்திற்காக பணியாற்றுபவர் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால்தான் காய்ச்சல் இருந்திருக்கும் என அதிகாரிகள் நினைத்தனர்.

    தீவிரமடையும் கொரோனா.. கேரளாவில் 3வதாக ஒருவருக்கு வைரஸ் தாக்குதல்.. உறுதி செய்த கேகே சைலஜா! தீவிரமடையும் கொரோனா.. கேரளாவில் 3வதாக ஒருவருக்கு வைரஸ் தாக்குதல்.. உறுதி செய்த கேகே சைலஜா!

    திருமணம்

    திருமணம்

    ஆனால், தனக்கு காய்ச்சல் குணமடைந்துவிட்டதாகவும், எப்படியாவது அழைத்து செல்லுங்கள் எனவும் அன்னம் ஜோதி வீடியோ மூலம் கோரிக்கைவிடுத்துள்ளார். இவருக்கு வரும் 18ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்பதுதான் இதில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. வீடியோவில் ஜோதி கூறுகையில், என்னுடன் பணியாற்றும் சுமார் 58 பேர் இந்தியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    2வது விமானமும் இல்லை

    2வது விமானமும் இல்லை

    நானும் அதே விமானத்தில் வூஹானிலிருந்து ஆந்திரா வர வேண்டியது. ஆனால், எனக்கும், மற்றொருவருக்கும் காய்ச்சல் இருந்தது. இதற்காக, முதல் விமானத்தில் எங்களை ஏற்றவில்லை. 2வது விமானத்தில் கூட்டிச் செல்வதாக கூறினர். ஆனால் பின்னர், அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு, கேட்டபோது 2வது விமானத்திலும் அழைத்துச் செல்ல முடியாது என கூறிவிட்டனர்.

    காய்ச்சல் குறைந்துவிட்டது

    காய்ச்சல் குறைந்துவிட்டது

    உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறது. உங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லலை என சீன அதிகாரிகள் உறுதி செய்யவில்லை. எனவே அழைத்து செல்ல முடியாது என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். ஆனால் எனக்கு இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டது. மூச்சு திணறல் உள்ளிட்ட கொரோனா வைரஸ் நோய் அறிகுறி எதுவுமே இல்லை. இது சாதாரண பிரச்சினைதான் என்று தெரிகிறது.

    கோரிக்கை

    எனவே, என்னை இந்தியா அழைத்துச் செல்லுங்கள். என்னை அங்கு வைத்து சோதிட்டு பார்த்தாலும் ஓகேதான். இவ்வாறு ஜோதி நெகிழ்ச்சியோடு கோரிக்கைவைத்துள்ளார். ஜோதியை எப்படியாவது மீட்டு வாருங்கள் என்ற கோரிக்கை ஆந்திரா முழுக்க எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை. அதேநேரம், சீனாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் யாரையுமே அழைத்து செல்ல முடியாது என அந்த நாடு அறிவித்துவிட்டது.

    English summary
    A young woman from Andhra Pradesh's Kurnool is stranded in China amid the deadly coronavirus outbreak.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X