For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத சுந்திரம் உள்ள நாட்டில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கவில்லை: அங்கோலா

By Siva
Google Oneindia Tamil News

Angola government denies it tried to ban Islam
லுவாண்டா: தங்கள் நாட்டில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்று அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மசூதிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உலகெங்கும் இஸ்லாமியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

நீதி மற்றும் மனித உரிமை அமைச்சகம் இஸ்லாத்தை சட்டப்படி ஏற்றுக் கொள்ள அனுமதி அளிக்கவில்லை என்று அங்கோலாவின் கலாச்சாரத் துறை அமைச்சர் ரோசா க்ரூஸ் இ சில்வா கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியதாக ஆப்பிரிக்க ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வந்தன.

இந்நிலையில் இது குறித்து வாஷிங்டனில் உள்ள அங்கோலா தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

மத விவகாரங்களில் தலையிடாத நாடு அங்கோலா. எங்கள் நாட்டில் ஏராளமான மதங்கள் பின்பற்றப்படுகின்றன. மக்கள் தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றும் சுதந்திரம் உள்ளது. எங்கள் நாட்டில் கத்தோலிக்கர்கள், ப்ராடஸ்டன்ட்கள், பாப்டிஸ்ட்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர்.

எங்கள் நாட்டில் இஸ்லாத்துக்கு தடை விதிக்கப்படவில்லை, மசூதிகள் இடிக்கப்படவில்லை என்றார்.

English summary
Angolan diplomats rubbished the reports that Islam is banned in their country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X