For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆங்ரி பேர்ட்டுக்கு மவுசு குறைந்தது

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹெல்சின்கி: சக்கைபோடு போட்டுவந்த ஆங்ரி பேர்ட் பிராண்டுக்கு மவுசு குறைந்துள்ளதாக அந்த நிறுவன புள்ளி விவரம் கூறுகிறது.

உங்க செல்போனில் ஆங்ரி பேர்ட் கேம் இல்லையா அப்போது அந்த செல்லே வேஸ்ட் அப்படீன்னு சொல்ற நிலைமைக்கு குறுகிய காலத்திலேயே மக்களை கொண்டுவந்த பெருமை ஃபின்லாந்தை சேர்ந்த ரோவியோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை சாரும்.

'முட்டையை திருடிய பன்றியை அடித்து நொறுக்கும் பறவை' என்ற ஒற்றை வரியை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கேம், 2 பில்லியனுக்கும் மேலாக டவுன்லோடு செய்யப்பட்டு சாதனை படைத்தது. பெரியவர் முதல் குழந்தைகள் வரை ஆங்ரி பேர்டுகளை குடும்ப அங்கத்தினராகவே பார்த்தார்கள்.

Angry Birds maker profit down

இந்நிலையில் அந்த விளையாட்டின் மவுசு குறைந்து வருகிறது.

ரோவியோ நிறுவனம் தனது வரிக்கு பிந்தைய லாபம் 2012ல் 55.5 மில்லியன் யூரோக்களாக இருந்ததாகவும் தற்போது அது 26.9 மில்லியன் யூரோக்களாக குறைந்துள்ளதாகவும் நிதி நிலை அறிக்கையில் சுட்டிக்காண்பித்துள்ளது. பிற நிறுவனங்களின் கேம்களுக்கு இப்போது மவுசு கூடியுள்ளதே ஆங்ரி பேர்டின் பின்னடைவுக்கு காரணம் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள்.

ஃபின்லாந்தின் சூப்பர் செல் நிறுவனம் உருவாக்கிய 'கிளாஸ் ஆப் கிளான்ஸ்' கேம் இப்போது முன்னணியில் உள்ளதால் அந்நிறுவன லாபம் 8 மடங்கு அதிகரித்து 892 மில்லியன் டாலர்களாக உள்ளது.

English summary
Finland's Rovio Entertainment, maker of the Angry Birds game, said its earnings halved last year due to stalling sales.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X