For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செவ்வாய் கிரகத்தில் கூட்டம் கூட்டமாக விலங்குகள்.. பீதியை கிளப்பும் நாசா போட்டோ

செவ்வாய் கிரகத்தில் கூட்டம் கூட்டமாக விலங்குகள் இருக்கும் படம் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    செவ்வாய் கிரகத்தில் விலங்குகளா? அதிர்ச்சி அளித்த புகைப்படம்

    நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் கூட்டம் கூட்டமாக விலங்குகள் மேய்வது போன்ற படத்தை ரோவர் விண்கலம் அனுப்பியுள்ளது.

    செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன.

    இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 2 ஆண்டுகளுக்கு முன்பு, 'கியூரியாசிட்டி ரோவர்' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

    யூகங்கள்

    யூகங்கள்

    அந்த ரோவர் விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த படங்களை ஆராயும் நிபுணர்கள் அடிக்கடி பல்வேறு விதமான யூகங்களை கூறி வருகின்றனர்.

    பெரியவகை விலங்குகள்

    பெரியவகை விலங்குகள்

    ஒரு படத்தில், விலங்குகளின் தொடை எலும்புகள் கீழே கிடப்பது போன்று தோன்றுகிறது. அதனைப் பார்த்த நிபுணர்கள் செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் வாழ்ந்து இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது

    நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது

    சமீபத்தில் அனுப்பிய புகைப்படம் ஒன்றில் பாறைகளுக்கு இடையே எகிப்தில் இருப்பதை போன்ற பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு அமைப்பு இருந்து உள்ளது. இதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பண்டைய நாகரிகத்தினர் கட்டிட பிரமிடைப்போல அது மிகவும் நேர்த்தியாக கட்டபட்டு உள்ளதாக கூறினர்.

    விலங்குகள் கூட்டம்

    விலங்குகள் கூட்டம்

    இதனால் பண்டைய எகிப்து நாகரிகத்தினர் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து இருக்க கூடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ரோவர் சமீபத்தில் அனுப்பி உள்ள படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான விலங்குகள் கூட்டமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    இது குறித்து சதி கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கூறும் போது, இது செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதராம் என்றார். இது செவ்வாய் கிரகத்தில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க்கும் ஒரு நம்பிக்கையாக இருக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

    English summary
    There are animals crowd in Mars. Rover satellite sends photo to earth from mars.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X