For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கெங்கும் காதல்... காதலின் நேசம் எல்லா அணுக்களிலும் நிறைந்து பிரபஞ்சம் இன்னும் அழகாகட்டும்

Google Oneindia Tamil News

சிகாகோ: காதலர் தினம் அன்று பார்த்து பார்த்து பரிசு வாங்கி கொடுத்து உருக உருக காதல் கவிதைகள் அனுப்பி காதலர் தினம் கொண்டாடுவதற்கு பல பேர் இருக்க காதலர் தினம் என்னும் கலாச்சாரம் எல்லாம் மேலை நாடுகளில் இருந்து வந்தது என்று சொல்லி அதெல்லாம் நமக்கு எதுக்கு என்று பேசுபவர்கள் ஒரு புறம்.

மேலை நாட்டு விழாக்களை கொண்டாட ஆரம்பித்த நாம் அங்கு எப்படி நிஜமாகவே கொண்டாடுகிறார்களா என்று முழுதும் தெரிந்து கொள்ளவே இல்லை என்று சொல்லலாம்.

சரி அமெரிக்கா போன்ற நாடுகளில் நிஜமாகவே வாலெண்டின்ஸ் டே எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா .

ரெட் ஹார்ட் காதல்

ரெட் ஹார்ட் காதல்

காதல் இதயம் சிகப்பு வண்ணத்தில் எப்போதும் காட்டப்படுகிறது. அங்கு பிப்ரவரி மாதம் என்றாலே வால்மார்ட் போன்ற பெரிய கடைகள் எல்லாம் காதல் பரிசு பொருட்களால் நிறைந்து கிடைக்கிறது. தூங்கும் தலையணை முதல் டெட்டி பொம்மை வரை எல்லாமே இதய வடிவத்தில் சிவப்பு வண்ணமாக மாறி விடுகிறது. காதலர் தினத்தில் சிவப்பு ஆடை அணிவதும் அங்கு பிரபலம்.

உருகி உருகி காதல்

உருகி உருகி காதல்

உருக உருக காதலிக்கும் இளம் வயது பருவத்தினர் மட்டும் காதலர் தினம் கொண்டாடுவதில்லை. அது தான் இங்கு சிறப்பு . இங்கு எல்லோரும் காதலர் தினத்தை ஒரு அன்பு தினமாக தான் கொண்டாடுகிறார்கள் . வயதான தாத்தா முதல் பள்ளி செல்லும் மூன்று வயது குழந்தை வரை எல்லோரும் காதலர் தினத்திற் கொண்டாடுகிறார்கள்.

ஆசிரியர்களுக்கும் ஸ்வீட்

ஆசிரியர்களுக்கும் ஸ்வீட்

பள்ளி செல்லும் குழந்தைகள் தன் ஆசிரியருக்கு அன்பு பரிசு எடுத்து செல்லுகிறார்கள். தன சக மாணவர்களுக்கு இனிப்பு , வாழ்த்து அட்டை என்று பரிசு எடுத்து செல்லுகிறார்கள். வீட்டுக்கு வரும்போது ஒரு பெட்டி நிறைய பரிசு பொருட்களோடும் சிரிப்போடும் வருகிறார்கள் . பள்ளியில் இருந்து வரும்போது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கூட சின்னதாய் ஒரு கார்டோ அல்லது வாழ்த்து செய்தியோ செய்து கொண்டு வந்து முகம் நிறைய சிரிக்கிறார்கள்.

ஜாலி டே

ஜாலி டே

இளம் வயதினர் தங்கள் மனதில் ஒளித்து வைத்த அன்பை சொல்ல ஒரு பூங்கொத்தோடு அல்லது ஒரு சாக்லேட் பையோடு அல்லது ஒற்றை ரோஜாவோடு அல்லது ஒரு தனிமை சந்திப்பு நேரமாகவோ அல்லது திருமணமான தம்பதிக்ளின் மெழுகுவர்த்தி ஒளி இரவு உணவாகவோ மட்டும் அல்ல வாலெண்டின்ஸ் டே இங்கு. .
அது மட்டும் அல்ல இன்னும் நிறைய இருக்கு. வயதான அம்மா அப்பாவுக்கு பரிசுகளோடு பிள்ளைகள் சந்திக்கிறார்கள். தங்கள் சொந்தங்களை தேடி தேடி பரிசுகளோடு செல்லுகிறார்கள். பெரிதாக ஒன்றும் இல்லை அவர்கள் சொல்ல செல்வது நான் உங்களை அன்பு செய்கிறேன் . நான் உங்களுக்கு இருக்கிறேன் என்ற உணர்வை தரும் ஒரு நாளாக தான் அது பார்க்கப்படுகிறது.

இதற்கு அதிக செலவு

பரிசு பொருட்கள் வாங்க என்று அந்த ஊரு மக்கள் கொஞ்சம் அதிகமாகவே இந்த நாட்களில் செலவு செய்கிறார்கள் என்றாலும் கூட குறிப்பிட்ட வயது பருவத்தினரின் காதலின் தினமாக மட்டும் அல்லாமல் அன்பின் தினமாக அன்பை நெருங்கிய உறவுகளுக்கு சொல்லும் ஒரு தினமாக தான் அங்கெல்லாம் காதலர் தினம் என்று சொல்லப்படும் வாலெண்டின்ஸ் டே கொண்டாடப்படுகிறது என்ற குட்டித் தகவலோடு உங்களுக்கும் அன்பின் தின வாழ்த்துக்கள். எல்லோரும் நேசத்தோடும் பாசத்தோடும் உறவுகளோடு பிணைந்திருப்போம். காதலின் நேசம் எல்லா அணுக்களிலும் நிறைந்து பிரபஞ்சம் இன்னும் அழகாகட்டும்.


- Inkpena சஹாயா

English summary
This is another piece on Valentines day celebrations in USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X