For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்லாமுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை... ஆஸ்திரேலியாவில் பரபரப்பு

By Siva
Google Oneindia Tamil News

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இஸ்லாத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது இனவெறிக்கு எதிராக போராடியவர்களுக்கும், இஸ்லாத்தின் ஷரியா சட்டத்தை எதிர்த்து போராடியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

ஆஸ்திரேலியாவில் ரிக்லெய்ம் என்ற அமைப்பு ஷரியா சட்டம், ஹலால் வரி மற்றும் இஸ்லாத்தை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன பேரணிகளை நடத்தி வருகிறது. அந்த அமைப்பின் கருத்துகளுக்கு இனவெறிக்கு எதிரான ஆதரவாளர்களின் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Anti-Islam protests in Australia turn violent

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ரிக்லெய்ம் அமைப்பினர் கண்டன போராட்டம் நடத்தினர். அப்போது இனவெறிக்கு எதிரான அமைப்பினர் ஆஸ்திரேலிய கொடியை நடுத்தெருவில் வைத்து எரித்தனர்.

இதையடுத்து இரண்டு அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அங்கு வன்முறை வெடித்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.

நிறுவனங்கள் தங்களின் உணவு வகைகளை ஹலால் என்று தெரிவிக்க அந்த உணவு வகைகளை பரிசோதித்து சான்றிதழ் வழங்க இஸ்லாமிய அமைப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ரிக்லெய்ம் அமைப்பினர் தெரிவித்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் தான் வன்முறை வெடித்தது.

English summary
Anti-Islam protests in Australia turned violent after anti-racist activists burned the country's flag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X