சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யும் அனுஷ்கா-கோஹ்லி.. தீயாக பரவும் போட்டோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கிரிக்கெட் வீரர் கோஹ்லி தனது காதலி அனுஷ்காவுடன் நியூயார்க்கில் ஷாப்பிங் செய்யும் போட்டோ வைரலாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர் கோஹ்லியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பது ஊரறிந்த விஷயம் தான். அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனைகள் வருவதும் பிரெக்கப் என தகவல் பரவுவதும் வாடிக்கை.

இந்நிலையில் விராத் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். அமெரிக்காவில் தங்களின் விடுமுறையை கொண்டாடி வரும் அவர்கள் அந்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ரிலாக்ஸ்

அமெரிக்காவில் ரிலாக்ஸ்

இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் என படுபிஸியாக இருந்தது. இதைத்தொடர்ந்து சில வீரர்கள் அமெரிக்காவில் ரிலாக்ஸ் செய்து வருகின்றனர்.

அனுஷ்காவும் கோஹ்லியும்

அனுஷ்காவும் கோஹ்லியும்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோஹ்லியும் அங்கு விடுமுறையை கொண்டாடி வருகிறார். ஐஃபா சினிமா விருது விழாவுக்காக அமெரிக்கா சென்றுள்ள கோலியின் காதலி, அனுஷ்கா சர்மாவும் அவருடன் இணைந்துள்ளார்.

ஊர் சுற்றும் காதலர்கள்

ஊர் சுற்றும் காதலர்கள்

இருவரும் அங்கு பல்வேறு பகுதிகளில் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். தனது குழந்தைப் பருவ தோழியை அனுஷ்கா அவருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

Virat Kohli and Anushka Sharma spotted holidaying in New York-Oneindia Tamil
சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங்

சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங்

இந்நிலையில் கோஹ்லியும் அனுஷ்காவும் நியூயார்க்கில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஷாப்பிங் செய்கின்றனர். அதனை போட்டோ எடுத்த ரசிகர் ஒருவர் எடுத்து சமூக வலைத்தளத்தில் அவற்றை பதிவிட்டுள்ளார். அந்தப் போட்டோக்கள் தீயாக பரவி வருகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Anushka sharma and Virat kohli enjoying their holiday in Newyork. Those photos became viral on social media.
Please Wait while comments are loading...