For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடைத்தேர்தலில் சூப்பர் வெற்றி.. நினைத்தபடி மலேசிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்!

மலேசியாவின் பிரதமராக அன்வர் இப்ராஹிம் விரைவில் பதவி ஏற்க இருக்கிறார்.

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவின் பிரதமராக அன்வர் இப்ராஹிம் விரைவில் பதவி ஏற்க இருக்கிறார்.

மலேசியாவில் மகாதிர் ஆட்சியின் போது, அன்வர் இப்ராஹிம் துணை பிரதமராக இருந்தார். ஆனால் அப்போது அன்வர் இப்ராஹிம் மீது தொடர் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து பாலியல் புகாரும் வைக்கப்பட்ட காரணத்தால் அவரை மகாதீர் பதவியில் இருந்து விலக்கினார். அதோடு இவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். 2015ல் இருந்து அவர் சிறையில் இருந்தார்.

Anwar Ibrahim gets a landslide by-election victory, may swear as PM soon

அதன்பின்தான் மலேசியா அரசியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நடந்தது. மகாதிருக்கு அடுத்து வந்த நஜீப் ரசாக் சரியாக ஆட்சி செய்யவில்லை. இவர் ஆட்சியில் ஊழலும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில்தான் மீண்டும் அரசியலுக்கு வந்த மகாதீர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

அதோடு அன்வர் இப்ராஹிம் உடன் மீண்டும் நட்பானார். இந்த நிலையில் அன்வர் இப்ராஹிம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால் பிரதமராக்குவதாக மகாதீர் அப்போதே வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி தற்போது அன்வர் இப்ராஹிம் வெற்றி பெற்றுள்ளார்.

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பீப்பிள் ஜஸ்டிஸ் பார்ட்டியை சேர்ந்த அன்வர் இப்ராஹிம் வெற்றிபெற்றுள்ளார். அவர் மொத்தம் 31,016 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட நஸ்ரி முக்தார் படுதோல்வி அடைந்தார். அவர் வெறும் 7,000 வாக்குகளே பெற்றார். இதன் காரணமாக மலேசியாவின் பிரதமராக அன்வர் இப்ராஹிம் விரைவில் பதவி ஏற்க இருக்கிறார்.

English summary
Anwar Ibrahim gets a landslide by-election victory, may swear as the PM soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X