For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூன்று புதிய ஐ-போன்களை வெளியிட உள்ளதா ஆப்பிள் நிறுவனம்? - ஆஸ்திரேலிய இணையதளம் தகவல்

By Staff
Google Oneindia Tamil News

மெல்போர்ன்: உலகளவிலான ஐ- போன் பிரியர்களை ஆச்சரிப்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட முடிவு செய்திருப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால், இது ஒரு தவறான தகவல் என்ற செய்தியும் அதே நேரத்தில் உலா வருகின்றது.

 Apple to launch three I Phone models in 2015 including new 4

இந்த புதிய போன்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக வெளியிடப்பட இருக்கும் 3 ஐ-போன்களில் ஒன்று ஐ-போன் 6 சி ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது ஐ-போன் 6ன் 4.7 இஞ்ச் திரையை விட சற்று குறைவாக 4 இஞ்ச் திரை மற்றும் ஏ-8 சிப் கொண்டதாக இருக்கும். இத்துடன் வரவிருக்கும் மற்ற இரண்டு போன்களும் ஏ-8 சிப்யை விட அதிக திறன் கொண்ட சிப்பை கொண்டிருக்கும் என அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிதாக 3 ஐ-போன்களுடன் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐ-போன் 6 மற்றும் 6 ப்ளஸ் போன்களின் மேம்படுத்தப்பட்ட வடிவங்களும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையா, பொய்யா என்பதை ஆப்பிள் நிறுவனம்தான் கூறவேண்டும்.

English summary
The latest scuttlebutt out of East Asia claims Apple has plans to release a total of three new I Phone models during its annual refresh cycle in the second half of the year, one of which will incorporate a 4-inch display.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X