For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிவி, போன், வாட்ச்.. அசத்தல் ஆப்பிள் சாதனங்கள் அறிமுகம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஆப்பிள் ஸ்பேஸ்ஷிப் வளாகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் வாட்ச் 3, ஆப்பிள் டிவி 4K, ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவ்வாண்டுக்கான ஐபோன் சாதனங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் வாட்ச் 3, ஆப்பிள் டிவி 4K, ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஆகிய புதிய சாதனங்கள் அப்போது அறிமுகம் செய்யப்பட்டன.

உலகம் முழுக்க உள்ள எலக்ட்ரானிக் பொருள் காதலர்கள், ஆப்பிள் மோகத்தவர்களால் கண் விழித்து கவனிக்கப்பட்ட இந்த நிகழ்வில் அறிமுகமான பொருட்கள் குறித்த ஒரு சுருக்கமான பார்வை:

ஆப்பிள் வாட்ச் 3

ஆப்பிள் வாட்ச் 3

முதலில் ஆப்பிள் வாட்ச் 3 பற்றி பார்க்கலாம். இதில் பில்ட்-இன் செல்லுலார் கனெக்டிவிட்டி உள்ளது. மெசேஜஸ் வசதியுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் 3 ஆப்பிள் ஏர்பாட்ஸ் உதவியுடன் பாடல்களை இசைக்கும் திறன் கொண்டுள்ளது. அளவை பொருத்த வரை ஆப்பிள் வாட்ச் 2 போன்றே காட்சியளிக்கும் ஆப்பிள் வாட்ச் 3 முதல் முறையாக சிரி பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை ஆப்பிள் வாட்ச் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி முதல் கிடைக்கும்.
செல்லுலார் மாடல் விலை 399 டாலர்களில் துவங்கும் நிலையில் செல்லுலார் வசதியில்லா மாடல் விலை 329 டாலர்கள் முதல் துவங்குகிறது.

ஆப்பிள் டிவி 4K

ஆப்பிள் டிவி 4K


புதிய ஆப்பிள் டிவி 4K எச்.டி.ஆர். டிவி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆப்பிள் டிவி எச்.டி.ஆர். வசதியுடன் டால்பி தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆப்பிள் டிவியை விட இருமடங்கு வேகத்தில் புதிய 4K டிவி இயங்கும் என்பதோடு 4K திரைப்படங்களின் விலை எச்டி விலையிலேயே வழங்கப்படும்
ஆப்பிள் டிவி 4கே விளையாட்டு போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பும் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஆப்பிள் டிவி 4K பிரத்தியேக விளையாட்டு செயலி வசதி கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான கேம்கள் வழங்குகிறது. ஆப்பிள் டிவி செப்டம்பர் 1-ம் தேதி முன்பதிவு துவங்கி செப்டம்பர் 22ம் தேதி முதல் விநியோகமாகிறது.

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்:

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்:


புதிய ஐபோன் 8 சீரிஸ் 4.7 மற்றும் 5.5 இன்ச் திரை கொண்டுள்ளது. இதுவரை வெளியான ஐபோன்களில் வழங்கப்படாத அளவு ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே மற்றும் அதிக உறுதியான ஹோம் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் முன்பை விட வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது. ஆப்பிள் A11 பயோனிக் சிப் கொண்டுள்ள புதிய ஐபோன் 8 சீரிஸ் இதுவரை வெளியானதில் அதிக சக்திவாய்ந்த ஐபோன் ஆகும். இத்துடன் இவை முந்தைய ஐபோன்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது. இத்துடன் ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமராவும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 8 கேமராக்கள் குறைந்த வெளிச்சத்திலும் அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டுள்ளது. ஐபோன் 8 ஸ்மார்ட்போன் 64 ஜிபி விலை இந்திய மதிப்பில் ரூ.44,741 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் 64 ஜிபி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ.51,141 முதல் துவங்குகிறது.

ஐபோன் X:

ஐபோன் X:


ஐபோன் 8 சீரிஸ்களை தொடர்ந்து ஐபோன் X ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச், 2436x1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய டிஸ்ப்ளே கொண்ட முதல் ஐபோன் இது தான்.
இந்த டிஸ்ப்ளே எச்.டி.ஆர்.10 மற்றும் டாஸ்பி விஷன் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்லாக் செய்யக் கூடிய வசதியை வழங்குகிறது. ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
வாட்டர் மற்றும் டஸ்ட் தாங்கும் வசதி கொண்டுள்ள புதிய ஐபோன் 12 எம்பி பிரைமரி டூயல் கேமரா அமைப்பு செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் OIS வசதியும், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 மாடலை விட இரண்டு மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் ஐபோன் X 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களில் கிடைக்கிறது. ஐபோன் X 64 ஜிபி விலை இந்திய மதிப்பில் ரூ.63,947 மற்றும் 256 ஜிபி இந்திய மதிப்பில் ரூ.73,459 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் ஐபோன் X முன்பதிவு அக்டோபர் 27 தேதி துவங்கி விற்பனை நவம்பர் 3ம் தேதி துவங்குகிறது.

English summary
Apple Inc. on Tuesday launched a completely redesigned iPhone X, along with two other new smartphones-iPhone 8 and iPhone 8 Plus-as well as Apple Watch and a higher-definition Apple TV.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X