For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதலைக்கு “லிப் டூ லிப்” கொடுக்கும் பெண்களுக்கு உடனே “ஜாப்” - சீன நிறுவனத்தின் வினோத இன்டர்வியூ!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் முதலைக்கு முத்தமிட்டால்தான் வேலை என்று நடைபெற்ற வினோத நேர்முகத் தேர்வால் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உலகில் முதல் முறையாக வேலைக்கு ஆள் சேர்க்க சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் வியப்பூட்டும் ஒரு சோதனையை நேர்முகதேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள காங்டான் மகாணத்தில் உள்ள காங்கோழு என்ற இடத்தில் சுகாதார பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

Applicants for sales post must kiss a CROCODILE

முதலைகள்தான் மூலதனம்:

இந்நிறுவனம் முதலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுகாதார பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. தனது நிறுவனத்தில் 9 விற்பனை பிரநிதியை பணியில் அமர்த்த திட்டமிட்ட அந்நிறுவனம் அதற்கான நேர்முகதேர்வு ஒன்றையும் நடத்தியது.

ஹைய்யையோ முத்தம்:

இதை கேட்டு வேலையில் சேரும் ஆர்வத்துடன் குவிந்த பலர், நுழைவு வாயிலில் உயிரோடு வைக்கப்படிருந்த ஒரு முதலையை அவர்கள் ஆர்வத்துடன் பார்த்தவாறு கடந்து சென்றனர். பின்னர் உள்ளே சென்ற பிறகுதான் அவர்களுக்கு தெரிந்தது. நேர்முகத்தேர்வின் முதல் படியே உயிரோடு இருக்கும் அந்த முதலைக்கு முத்தமிடுவது என்பதுதான்.

முத்தமும், 1000 யுவான் பரிசும்:

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டுமே ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தது. அது என்னவென்றால் முதலையின் வாய்ப்பகுதி கட்டப்பட்டிருந்தது. இந்த முதல் சுற்றில் முதலைக்கு தைரியமாக முத்தமிடுபர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மட்டுமல்லாமல்,ஆயிரம் யுவான் பரிசுத்தொகையாக பெற முடியும்.

ஆண்களுக்கு நோ என்ட்ரி:

எனினும், பெண்கள் பலர் இந்த சோதனைக்கு முன்வர தயங்கினர். அதேநேரத்தில் ஆண்கள் பலர் மிகுந்த தைரியத்துடன் முன்வந்தனர். ஆனால், பெண்களை மட்டுமே பணிக்கு எடுப்பதாக கூறிய நிறுவனம், ஆண்களை பங்கேற்கவிடவில்லை.

பயத்தைப் போக்கவே பச்சக்:

முதலையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களாலேயே தங்களுடய சுகாதார பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் முதலையின் மீதான அச்சத்தில் இருந்து வெளிவரவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
One Chinese company has added a deadly spin to its recruitment process by asking prospective employees to kiss a live crocodile to prove their courage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X