For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

50 ஆண்டுகளுக்குப் பின் ஐநா சபையில் தமிழர்.. 3 மணி நேரம் ‘இசை விருந்து’ தந்த ஏ.ஆர்.ரஹ்மான்

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று மணி நேர இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

இந்தியாவின் 70-வது சுதந்திரதினத்தையட்டி ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் நேற்று நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

ஏ.ஆர்.ரஹ்மான் மேடை ஏறியதுமே பார்வையாளர்கள் பகுதியில் இருந்த பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், இந்தியஅமெரிக்கர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

3 மணி நேர இசை நிகழ்ச்சி...

3 மணி நேர இசை நிகழ்ச்சி...

அதனைத் தொடர்ந்து தனது இசைக்குழுவுடன் சேர்ந்து ஏ.ஆ.ரஹ்மான் சுமார் 3 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தினார். சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஜெய் ஹோ பாடலுக்கு அவர் இசையமைத்தார்.

டிரம்ஸ் சிவமணி...

டிரம்ஸ் சிவமணி...

இது தவிர சுபி பாடல்கள், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்களுக்கும் அவர் இசையமைத்தார். ஏ.ஆர்.ரகுமானின் 2 சகோதரிகளும், பிரபல பாடகர் ஜாவித் அலியுடன் இணைந்து பாடினர். ‘டிரம்ஸ்‘ சிவமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிரம்ஸ் வாசித்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சியை பார்வையாளர்கள் பெரிதும் ரசித்தனர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி...

எம்.எஸ்.சுப்புலட்சுமி...

இதேபோல், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.நா. சபையால் அழைக்கப்பட்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி அங்கு கர்நாடக இசை கச்சேரி நடத்தினார். இதன்மூலம் ஐநா சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

2வது இந்தியர்...

2வது இந்தியர்...

தற்போது அவரைத் தொடர்ந்து ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதன்மூலம், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு பிறகு, இந்தியாவின் சார்பில் ஐ.நா.வில் இன்னிசை கச்சேரி நடத்திய 2-வது இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

தமிழர்கள்...

தமிழர்கள்...

இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்தியாவின் சார்பில் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் என இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Oscar winning Indian composer A.R. Rahman's music of universal harmony blending traditions, time, faiths and languages soared on Monday through the General Assembly chamber, a venue known more for cacophonous discord.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X