For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2000 ஆண்டுகள் பழமையான.. அசர வைக்கும் பூனை மலைபாதை.. பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பெரு நாட்டில் பெரிய பூனை வடிவத்திலான மலைப்பாதையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

லிமா: இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பூனை வடிவத்திலான மலைப்பாதை ஒன்று பெரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, பழங்கால நாகரீகத்தில் சிறந்து விளங்கும் நாடு. மச்சு பிச்சு போன்ற உலகின் பாரம்பரிய சின்னங்களை கொண்ட நாடு. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பூனை வடிவிலான மலைப்பாதை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Archaeologists discovers 2000 years old cat figured route in Peru

பெரு நாட்டின் தலைநகர் லிமாவுக்கு தெற்கே அமைந்திருக்கிறது நாஸ்கா பாலைவனம். இதில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மிக பிரம்மாண்டமான பூனையின் வடிவத்தில் செதுக்கப்பட்டிருக்கும் மலைப்பாதையை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த பிரமாண்ட பூனை மலைப்பாதை சுமார் 120 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைப்பாதை அமைக்கப்பட்டிருக்கலாம் என பெரு நாட்டின் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இயற்கை சீற்றங்களினால் இந்த மலைப்பாதை மறைந்து போனதாகவும், ஆராய்ச்சி ஒன்றிற்காக மலைப்பாதையை சுத்தம் செய்யும் போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வளவாக தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே இப்படியொடு பூனை மலைப் பாதையை அந்நாட்டு மக்கள் உருவாக்கி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The archaeologists in Peru have discovered 2000 years old cat figured route on a desert hill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X