• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் காணும் உலகம் உண்மையல்ல.. அது வேற்றுகிரகவாசிகளால் நிறைந்தது???

By Dakshinamurthy
Google Oneindia Tamil News
  நம் உலகத்தில் வேற்றுகிரக வாசிகள் ஏற்கனவே வந்துவிட்டார்களா ?

  வாஷிங்டன்: நாம் காணும் உலகம் உண்மையல்ல.. அது வேற்றுகிரகவாசிகளால் நிறைந்தது.. என்ன அதிர்ச்சியாக இருக்கிறது. வாங்க இந்த குட்டித் தொடரைப் படிக்கலாம்.. நிறையபப் புரிஞ்சுக்கலாம்.

  கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பார்கள், ஆனால் உண்மையில் அறிவியலையும், விஞ்ஞானத்தையும் பொறுத்தவரை மனித குலம் இன்னும் மண் துகள் அளவு கூட கற்கவில்லை என்பது தான் உண்மை.

  அண்டசராசரத்தில் இருக்கும் பல கோடானு கோடி பால்வீதிகளில் ஒரு சிறு புள்ளி தான் நம்முடைய சூரிய குடும்பம். இந்த சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு தூசி தான் நம் பூமி. இப்படி இருக்க இந்த அண்டசராசரத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோம் என்று நம்புவது போல காமெடி வேறு எதுவுமில்லை.

  எப்படி இருப்பார்கள் ஏலியன்ஸ்

  எப்படி இருப்பார்கள் ஏலியன்ஸ்

  வேற்றுகிரகவாசிகள் என்றாலே பெரியதாக வால், பூச்சிகளை போல முகம், முதலையை போல தோல் என்று கொடூரமாக இருப்பார்கள் என்பது தான் நம்முடைய கனிப்பு. ஏனென்றால் ஹாலிவுட் படங்கள் அனைத்தும் நமக்கு அதைத்தான் கற்பித்துள்ளன. பூமியை அழிக்க தான் வேற்றுகிரகவாசிகள் வருவார்கள், அதுவும் அமெரிக்காவுக்கு தான் வருவார்கள், அமெரிக்கர்கள் தான் இந்த உலகத்தையே காப்பாற்றுவார்கள் என்று தான் நமக்கு கற்ப்பிக்கப்பட்டுள்ளது.

  ஏலியனை நேரில் பார்த்த பிராங்க்

  ஏலியனை நேரில் பார்த்த பிராங்க்

  உண்மையில் வேற்றுகிரகவாசிகள் நமக்கு கற்பிக்கப்பட்டது போலவும், காண்பிக்கப்பட்டது போலவும் இருக்க மாட்டார்கள். அழகாக, செக்சியாக இருப்பார்கள் என்று அதே அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க் ஸ்ரேன்ஜஸ் கூறுகிறார். இவர் வேற்றுகிரகவாசிகளை பற்றி ஆராய தன்னுடைய வாழ்நாளையே தியாகம் செய்த விஞ்ஞானி. NICUFO என்ற வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராயும் அமைப்பை உருவாக்கி உலகம் முழுவதும் வேற்றுகிரகவாசிகள் பற்றி கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை நடத்தியவர்.

  ஏலியன்கள் தொடர்பு

  ஏலியன்கள் தொடர்பு

  உலகில் ஓராயிரம் விஞ்ஞானிகள் இருக்கும் போது ஏன் இவரை பற்றி மட்டும் பெரிதாக பேச வேண்டும். காரணம் இருக்கிறது ஏனென்றால் மற்றவர்கள் எல்லாம் வேற்றுகிரகவாசிகளை பற்றி படித்தவர்கள் கேள்விப்பட்டவர்கள், ஆனால் இவர் வேற்றுகிரகவாசியுடன் வாழ்த்திருக்கிறார், பேசியிருக்கிறார், பார்த்து வியந்திருக்கிறார். இதனை அனுபவித்த மிக முக்கியமான மற்றோரு விஞ்ஞானி பில் ஸ்னீடர்.

  ஆணழகன் ஏலியன் தோர்

  ஆணழகன் ஏலியன் தோர்

  "ஸ்டிரேஞ்சர் இன் பெண்டகன்" என்ற புத்தகத்தில் அவர் VALIANT THOR என்ற அந்த வேற்றுகிரகவாசியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், தோரின் அழகையும் வர்ணித்து உள்ளார். ஆறு அடிக்கு மேல் உயரம், ஆறு விரல்கள், மிளிரும் மேனி, கூர்மையான கண்கள், 200க்கும் மேற்பட்ட மொழியில் பேசும் திறன், ஆக்டோபஸைப் போல காப்பர் ஆக்சைட் ரத்தம், 185 கிலோ எடை, ஆயுட்காலம் 490 வருஷம் என பிரமிப்பான தகுதிகளை தோர் பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

  சமாதான தூதன் தோர்

  சமாதான தூதன் தோர்

  அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அணு ஆயுத போர் நிகழாமல் தடுக்க தோர், வீணஸ் கிரகத்திலிருந்து பூமிக்கு சமாதான தூதுவராக வந்ததாகவும், அதன் பின் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பல பாதுகாப்பு தடவாளங்களையும், ராணுவ உயர் தொழில்நுட்பத்தையும் கற்று கொடுத்ததாகவும் "ஸ்டிரேஞ்சர் இன் பெண்டகன்" என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு தோர் என்ற அறிவியல் புனைவு படமும் ஆங்கிலத்தில் வந்துள்ளது.

  ரகசியங்களின் ரகசியம் ஏரியா 51

  ரகசியங்களின் ரகசியம் ஏரியா 51

  ஏரியா 51 என்ற அமெரிக்காவின் பல வருட ரகசிய இடத்தை உருவாக்கியவரே இந்த தோர் தான் என்றும், அதில் தான் வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பையும், பல வேற்றுகிரக தொடர்பையும் அமெரிக்கா மறைத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளுடன் வைத்துள்ள உறவு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதாரங்களுடன் தெரியும் என்றும், ஆனால் எதிரிகளாக இருந்தாலும், "ஜென்டில்மேன்" ஒப்பந்தத்தின்படி இந்த தொடர்பை அந்த நாடுகள் மறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

  ஏலியன்கள் நேசன் ஹாக்கிங்ஸ்

  ஏலியன்கள் நேசன் ஹாக்கிங்ஸ்

  பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் அடிக்கடி ஒரு வாக்கியத்தை கூறுவார், " மனிதர்களே விருந்தாளிகளை வரவேற்க தயாராக இருங்கள்" என்று. இதில் அவர்கள் விருந்தாளிகள் என்று அவர் கூறுவது வேற்றுகிரகவாசிகளை தான். ஆனால் உண்மையில் வேற்றுகிரகவாசிகள் நம் பூமியுடன் பல வருடமாக தொடர்பில் இருக்கிறார்கள் என்பது அவருக்கு மிக நன்றாக தெரியும். அப்படி இருக்க விருந்தாளிகளை வரவேற்க என்று அவர் கூறுவது, வேற்றுகிரகவாசிகளால் பூமிக்கு ஏற்படவுள்ள அழிவு குறித்து தான்.

  நாம் முன்பே கூறியது போல, எவ்வளவோ நாடுகள் இருக்கும் போது வேற்றுகிரகவாசிகள் ஏன் அமெரிக்காவிடம் மட்டும் பேசுகிறார்கள், தொடர்புக்கொள்கிறார்கள், தாக்குகிறார்கள்... காரணம் இருக்கிறது அதன் பெயர் பசிபிக் பெருங்கடல்!

  (இன்னும் வரும்..)

  புகைப்படங்கள் நன்றி:

  English summary
  In the book Stranger at the Pentagon Dr. Stranges claims that sometime in 1958 he was given photographs of ‘Val’ Valiant Thor who was a Alien.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X