For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 தீவிரவாதிகள் அல்ல 6 பேர்.. 22 மக்கள் மரணம்.. காபூல் ஹோட்டல் தாக்குதலில் வெளிவரும் உண்மைகள்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காபூல் ஹோட்டல் தாக்குதல்- வீடியோ

    காபூல்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் இண்டர்காண்டினேன்டல் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில் தற்போது பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியாகி இருக்கிறது.

    இந்த தாக்குதல் 12 மணிநேர போராட்டத்திற்கு பின்புதான் முடிவுக்கு வந்தது. இதில் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    பலருடைய உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதில் 6 தீவிவாதிகள் கொலை செய்யப்பட்டு இறக்கிறார்கள்.

    சனி இரவு

    சனி இரவு

    கடந்த சனிக்கிழமை இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் நேரப்படி சரியாக இரவு 9 மணிக்கு நடந்து இருக்கிறது. காபூலில் இருக்கும் இண்டர்காண்டினேன்டல் ஹோட்டலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே சென்று இருக்கிறார்கள்.

    6 பேர்

    6 பேர்

    முதலில் இதில் 4 தீவிரவாதிகள் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ராணுவம் 6 தீவிரவாதிகள் என்று கண்டுபிடித்து இருக்கிறது. இந்த ஆறு பேரும் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    மரணம் எத்தனை

    மரணம் எத்தனை

    முதலில் இதில் 6 பேர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது 22 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 14 பேர் வெளிநாட்டு பயணிகள். பலருடைய உடல் அடையாளம் காணப்படவில்லை.

    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்று ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. தீவிரவாதிகள் எப்படி உள்ளே வந்தார்கள், எப்படி ஆயுதம் கொண்டு வந்தார்கள் என்று விசாரிக்கிறார்கள். உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் எப்படி தாக்குதல் நடந்தது என்று தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

    English summary
    A group of four heavily-armed gunmen targeted the Intercontinental Hotel of Kabul in Afghanistan on Saturday killing five killed.During the ongoing assault, special forces were lowered by helicopters onto the roof of the luxury hilltop hotel which killed two attackers. Army ends the Kabul Hotel attack. Army confirms that 22 people died in Kabul Hotel attack
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X