For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நவாஸ் ஷெரிப்பிற்கு கைது வாரண்ட்... பாக் நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நலாஸ் ஷெரிப்பிற்கு அந்த நாட்டு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத் : பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவ்ஸ ஷெரிப்பிற்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் தங்கள் நாட்டில் முறைகேடாக சேர்த்த சொத்துகளை வெளிநாடுகளில் முதலீடு செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான தகவல் 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியானது. அதில் பல உலக தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

Arrest Warrant Issued Against Nawaz Sharif By Pakistan Court

இதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி நவாஸ் ஷெரீபின் பிரதமர் பதவியைப் பறித்தது. மேலும், நவாஸ் மற்றும் அவரது மகன்கள் ஹசன், ஹுசைன், மகள் மரியம், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உஉள்ள 3 ஊழல் வழக்குகளை இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான இரண்டு வழக்குகளில் நவாஸ் ஷெரிப்பிற்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக அவரது டிஃபென்ஸ் வழக்கறிஞர் ஜாபிர் கான் கூறியுள்ளார்.

நவாஸ் ஷெரிப் தற்போது தன்னுடைய மனைவி கல்சமின் புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டனில் உள்ளார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

English summary
Pakistani court on Thursday issued arrest warrants for ousted prime minister Nawaz Sharif in connetion with Panama papers corruption case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X