For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிரிக் ஆர் டிரீட்.. விடாமல் துரத்தும் ஹல்லோவென் கொண்டாட்டங்கள்!

Google Oneindia Tamil News

சிகாகோ: மேலை நாடுகளில் வெகு விமரிசையாக ஹல்லோவென் கொண்டாடுவது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். சரி அந்த ஹல்லோவென் ஏன் கொண்டாடுறாங்க என்ன வரலாறு எதுக்கு கொண்டாடறாங்க.

நாம் கொண்டாடற பொங்கல் திருநாளில் கரும்பு இல்லாமலா? பொங்கல்னு சொன்னாலே கரும்பு அடுக்கி வச்சிருக்கிற மாதிரி தான் இங்கே பம்ப்கின் னு சொல்ற பூசணிக்காய் எல்லா பக்கமும் பார்க்கலாம். ஹல்லோவென் அன்றைக்கு பூசணிக்காய் வைக்கப்படாத வீடே இல்லைன்னு சொல்லலாம். இந்த நாளோட வரலாறு என்னன்னா பண்டை காலத்தில அறுவடை எல்லாம் முடிச்சதும் பெருசா தீ மூட்டி குளிர்காய உட்காருவங்களாம். அப்போ கெட்ட ஆவி எதுவும் வரக்கூடாது னு சில முக மூடிகளை போட்டுக்கிட்டாங்களாம். அந்த முக மூடிகளை பார்த்தா நிஜ பேய்கள் நம்ம நண்பர்கள் தான் ன்னு சொல்லிட்டு அவங்க பக்கம் வராதாம். அப்புறம் விளைந்த காய்கறில டர்னிப் அந்த மாதிரி காய்களில் பயங்கரமா சில முகங்களை செதுக்க ஆரம்பிச்சாங்களாம். அப்புறம் தான் பின்னாட்களில் அது பூசணிக்காய் பெருசாவும் செதுக்க வசதியாகவும் இருப்பதால் பூசணிக்காய் பயன்படுத்த ஆரம்பிச்சு இப்போ அது பம்ப்கின் திருவிழாவாகவே ஆகிடுச்சு.

Article about Hallowen day

அது அந்த காலத்தில சரி இப்போ என்ன செய்றாங்கனு பார்த்தா எல்லா வீடுகளிலும் முன்னாடி சிலந்தி வலை, வவ்வால், எலும்பு கூடு, ரிப் என்று சொல்லப்படும் கல்லறை வாசகம், விட்ச் பொம்மை, கோஸ்ட் பொம்மை என்று வித்தியாசம் வித்தியாசமா பயங்கர உருவங்கள் தொங்குது. வீடு வாசலில் கட்டாயம் ஓன்று அல்லது நிறைய பூசணிக்காய் செதுக்கி அதுக்குள்ளே விளக்கு வச்சு அழகா அடுக்கி வச்சிடுறாங்க. இந்த கோரமான பொம்மைகளையும் விளக்கு வச்ச பூசணிக்காய் முகங்களையும் பார்த்து பேய் பிசாசு எல்லாம் அவங்க வீட்டுக்குள்ள வராதாம். நம்பிக்கை தான் வாழ்க்கை இல்லையா. இது அவங்களோட நம்பிக்கை. அப்படி வச்சுக்கிட்டு பேய் எல்லாம் ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டு ஒரு பை அல்லது பம்ப்கின் வடிவ பிளாஸ்டிக் கூடையை எடுத்துட்டு ட்ரிக் ஆர் ட்ரீட்னு சொல்லிக்கிட்டு ஜாலியா ஒவ்வொரு வீடா கதவை தட்ட கிளம்பிடறாங்க.

நம்ம ஊர்ல பேய் பிசாசு கல்லறை எல்லாமே பயத்தின் அடையாளமா தான் பார்க்கிறோம். ஆனா இந்த பயபுள்ளைங்க என்னன்னா பேய்க்கும் பிசாசுக்கும் ஒரு மாசத்தையே கொடுத்து அக்டோபர் மாதத்தை ஹல்லோவென் மாசம்னு சொல்லி அந்த மாசக் கடைசியான அக்டோபர் 31 ஆட்டம் பாட்டம்னு கொண்டாடி மரணம் எல்லாம் ஜாலி தான் பாஸ் னு ஜாலியா கொண்டாடுறாங்க. அதை தொடர்ந்து தான் சகல புனிதர்கள் தினம், அடுத்த நாள் நவம்பர் 2 ஆன்மாக்கள் தினம் என்று கொண்டாட்டம் முடிகிறது. ஆன்மாக்கள் தினத்திலே கூட நம்ம ஊர் மாதிரி கல்லறையில் பூக்கள் வைத்து மெழுகு ஏற்றி பிராத்தனை செய்வதில் மட்டும் நிறுத்தாம இறந்து போனவர்களுக்கு பிடித்த உணவெல்லாம் சமைத்து வந்து எல்லாரும் அதை மாறி மாறி பரிமாறி ஒரு திருவிழா மாதிரி தான் கொண்டாடுறாங்க.

சரி ஹல்லோவென் எதுக்கு கொண்டாடுறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டோம். இப்போ அந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடுறாங்க ஆமா அது என்ன ட்ரிக் ஆர் ட்ரீட்? அங்க உள்ள குட்டீஸ் எல்லாம் அந்த ராத்திரியில் என்ன என்ன விஷயங்கள் பண்ணி லூட்டி அடிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க இந்த விடியோவைப் பாருங்க. டக் டக் ட்ரிக் ஓர் ட்ரீட்?

- Inkpena சஹாயா

English summary
Trick or treat is a part and parcel of Hallowen day celebrations in the USA. Here is a story on this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X